1. தோட்டக்கலை

கை கொடுக்கும் கரைசல்: பயிர்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு இயற்கையான வழி

KJ Staff
KJ Staff
Healthy Plants

பொதுவாக எல்லா வகையான தாவர வளர்ச்சிக்கும் 16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படுகின்றன.  பயிர் வளர்ச்சிக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை ஊட்டச்சத்தாகவும் அதிகமாக தேவைப்படும் சத்தாகவும் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்களை இரண்டாம் நிலை துணைச்சத்துக்கள் எனப்படும். முதலில் 16 வகையான ஊட்டச்சத்துக்களை தெரிந்து கொள்வோம்.

16 வகையான ஊட்டச்சத்துக்கள்
தழைச்சத்து
மணிச்சத்து
சாம்பல்சத்து
கால்சியம்
நீரகம்
மெக்னீசியம்
உயிரியம்
சாம்பல்சத்து
சல்பர்
இரும்பு
துத்தநாகம்
குளோரின்
மேங்கனீஸ்
போரான்
தாமிரம்
மாலிப்டினம்
கார்பன் (கரிமம்)

இவற்றில் ஏதெனும் ஒன்று குறைந்தாலும் அது தாவரத்தின் வளர்ச்சியினை பாதிக்கும். இயற்கை வேளாண்மையை விரும்புவோருக்கு, இயற்கை ஈடு பொருட்களை கொண்டு ஊட்டச்சத்து பற்றாக்குறையை எளிதில் நிவர்த்தி செய்யலாம்.

16 Essential Nutrients

தாவரமும் ஊட்டச்சத்து விவரமும்  

ஊட்டச்சத்து

தாவரம்

பயன்கள்

மணிச்சத்து

ஆவாரம் இலை

மணி பிடிக்க உதவும்

தழைச்சத்து

கொளுஞ்சி, தக்கபூண்டு

பயிர் செழித்து காணப்படும்

 

இரும்புச்சத்து

முருங்கை இலை, கருவேப்பிலை

பூக்கள் நிறைய பூக்கும்

அயோடின் (சோடியம்)

வெண்டை இலை

மகரந்தம் அதிகரிக்க

தாமிர சத்து

செம்பருத்தி, அவரை இலை

தண்டுப்பகுதி தடித்து காணப்படும்

கந்தகம் (சல்பர்)

எள்ளுசெடி

செடி வளர்ச்சி அதிகரிக்க

துத்தநாக சத்து

புளியந்தலை

இலைகள் ஒரே சீராக இருக்க

போரான்

எருக்கம் இலை

காய், பூ அதிகரிக்க

சுண்ணாம்புச் சத்து                  (கால்சியம் கார்பனேட்)

துத்தி இலை

 

சத்துக்களை பயிர்களுக்கு பகிர்தல்

மெக்னீசியம்

பசலைக்கீலை

இலை ஓரம் சிவப்பாக மாறாது

மாலிப்டினம்

எல்லா வகையான பூக்கள்

பூக்கள் உதிராது

சிலிக்கா

மூங்கில் இலை

பயிர் நேராக இருக்க

நொச்சி: பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்டது
வேம்பு : கசப்பு தன்மை புழுக்களிடமிருந்து பாதுகாக்கவும்.

unhealthy plants

மேலே குறிப்பிட்ட அனைத்து தழைகளையும் அரைக்கிலோ வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கோமியம் அரை லிட்டர்,  நாட்டு சர்க்கரை அரைக்கிலோ, சோற்றுக் கற்றாலை மடல் 1,  தயிர் அரை லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். ஆவாரம் பூ மற்றும் செம்பருத்தி பூ போன்றவற்றை 100 கிராம் அளவில் எடுத்து கொள்ள வேண்டும். 

பூக்கள் அனைத்தையும்  நன்றாக இடித்து மண் பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அத்துடன் நாட்டுச் சர்க்கரை, கோமியம், தயிர், தோல் நீங்கலாக சோற்றுக்கற்றாலை மடல் விழுது என அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு வாரம் வரை நொதிக்க விட வேண்டும். பின்னர் ஒரு வாரம் கழித்து அவற்றை வடிகட்டி  100 மில்லி கரைசலுக்கு 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் சேர்த்து தெளிப்பதன் மூலம் பயிர்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டினை எளிதில் நிவர்த்தி செய்யலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: 16 Essential nutrients for plants growth and how to overcome its deficiency

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.