விளைநிலங்களில் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும், புழுக்களைக் கொல்லும் பூஞ்சானக் கொல்லி, வேளாண்துறையால் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
வாழ்வாதாரமே கேள்விக்குறி (Livelihood is in question)
விளைநிலங்களில் உருவாகும், புழுக்கள், பூச்சிகள் மற்றும் வண்டுகளால், விளையும் பயிர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், கடன் வாங்கி பயிர்சாகுபடி செய்யும் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து, தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
தொடர்கதை (Serial)
இத்துடன் மழை,வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரும் குறுக்கிடும்போது, தன் வாழ்க்கைகை முடித்துக்கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படும் சோகமும் தொடர்கதையாகிறது.
அரசு உதவி (Government assistance)
எனவே விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் பல்வேறுத் திட்டங்கள் மூலம் மானியம் வழங்குதல், விலையில்லா நாற்றுக்களை அளித்தல், மானிய விலைவில் உரங்களை வழங்குதல் உள்ளிட்டவை அரசு தரப்பில் செய்யப்படுகிறது.
மெட்டாரைசியம் (Metarhizium)
இதன் ஒருபகுதியாக, பயிர்களை நாசமாக்கும் புழுக்களைக் கொல்லும் மெட்டா ரைசியம் எனும் பூஞ்சான கொல்லியை, வேளாண்துறை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இதுகுறித்து வேளாண் துறையினர் கூறுகையில் :
பூஞ்சானக் கொல்லி (Fungicide)
மண்ணில் விளையும் பயிர்களுக்கு, சேதம் விளைவிக்கும் பல்வேறுவகையான புழுக்கள், பூச்சிகளை கொல்லக்கூடிய 'மெட்டாரைசியம் எனும் பூஞ்சானக் கொல்லி, வேளாண்துறை வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பயன்பாடு + பயன்கள் (Application + Uses)
-
இந்த பூஞ்சான கொல்லியை மண்ணுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
உறங்கும் நிலையில் உள்ள புழு, பூச்சிகள் கூட இறந்து விடும்.
-
காண்டாமிருக வண்டுகளையும் கொன்றுவிடும் தன்மை படைத்தவை இந்த பூஞ்சானக் கொல்லிகள்.
-
புழுக்களின் குழிகளில் மண் கலந்த பூஞ்சான கொல்லியை இட வேண்டும்.
முட்டை, புழு, வண்டு என அனைத்தையும் அழிக்கும்.
-
இந்தக் கொல்லியை, ஒரு தென்னை மரத்தை சுற்றி, 200 கிராம் வீதம் இட்டால், வண்டுகள் தாக்காது.
விலை (Price)
-
ஒரு கிலோ ரூ.135க்கு வழங்கப்படுகிறது. உழவர் குழுக்களுக்கு, மொத்தமாக, 500கிலோ வரை வழங்கப்படும்.
-
ஒரு எக்டருக்கு, 10 கிலோ வீதம் பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
மேலும் படிக்க:
ஆரோக்கிய நொறுக்குத்தீனியாக உடல்நலம் காக்கும் தாமரை விதை!