உரங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரங்கள் விற்பனை (Sale of fertilizers)
விவசாயிகளின் விளைச்சலுக்கு உதவும் வகையில், மானிய விலையில் உரங்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
புகார்கள் (Complaints)
ஆனால் அதிக லாபம் பெற விரும்பும் சிலர், செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உரத்தைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
டி.ஏ.பி. உரம் (D.A.P. Compost)
திருப்பூர் மாவட்டத்தில், தோட்டக்கலை பயிர் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு அடியுரமாகப் பயன்படும் டி.ஏ.பி. உரம் வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் கடைகளில் விற்பனைக்கு உள்ளது.
கையிருப்பு அவசியம் (Reserves are essential)
சில்லரை விற்பனையாளர்கள் அதிகபட்ச விலைக்குட்பட்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உர விற்பனைக் கடைகளில், உரம், பூச்சி மருந்து வகைகளின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் தெளிவாக வைக்கப்பட வேண்டும்.
உரிமம் ரத்து (License revoked)
உரங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக, அதிக விலைக்கு விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுத்து, விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
குறிப்பிட்டுள்ள தொகை (The amount mentioned)
விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையைக் கொண்டு, விற்பனை இயந்திரம் மூலம் வழங்கும் ரசீதில் குறிப்பிட்டு உள்ள தொகை மட்டுமே செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?
TNAUவின் மாதாந்திர நேரடி அங்கக வேளாண்மை பயிற்சி- அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது!
கலப்பு பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து?