Horticulture

Tuesday, 09 March 2021 11:09 AM , by: Elavarse Sivakumar

Credit : Teahub.io

நடப்பு 2020-21ம் பயிர் ஆண்டில் மாம்பழ உற்பத்தி 4.24 சதவீதம் அதிகரித்து 21.12 மில்லியன் டன்னை எட்டும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாங்கனி உற்பத்தி (Mango production)

கடந்த 2019-20ம் பயிர் ஆண்டில் (ஜூலை - ஜூன்) கனிகளின் அரசன் என்று அழைக்கப்படும் மாங்கனி உற்பத்தி 20.25 மில்லியன் டன்னாக இருந்தது

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இருந்து மாம்பழ வரத்து துவங்கிவிட்ட நிலையில், வரும் ஜூன் மாதம் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மாம்பழ சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி குறைய வாய்ப்பு (Production is likely to decline)

இருப்பினும், முலாம்பழம் மற்றும் தர்பூசணி போன்ற கோடை கால சீசனுக்கான பழங்களின் உற்பத்தி நடப்புப் பருவத்தில் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில் நடப்புப் பயிர் ஆண்டில் 3.12 மில்லியன் டன் தர்பூசணி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த பயிர் ஆண்டில் 3.15 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டது.

வாழை உற்பத்தி (Banana production)

எனினும் வாழை உற்பத்தி 33.75 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 32.59 மில்லியன் டன் வாழை உற்பத்தி செய்யப்பட்டது. ஓட்டுமொத்தமாக மொத்த பழங்களின் உற்பத்தி 103.22 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

காய்கறி உற்பத்தி (Vegetable production)

இது கடந்த பயிர் ஆண்டில் 102 மில்லியன் டன்னாக இருந்தது. முக்கிய காய்கறிகளைப் பொருத்தவரை, உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த பயிர் ஆண்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

நடப்புப் பயிர் ஆண்டில் வெங்காய உற்பத்தி 26.29 மில்லியன் டன்னாகவும், உருளைக் கிழங்கு உற்பத்தி 53.11 மில்லியன் டன்னாகவும் அதிகரிக்கும்.

இவ்வாறு  வேளாண் அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தூத்துக்குடியில் பிசானப் பருவ நெல் அறுவடை தீவிரம்: மகசூல் குறைவால் விவசாயிகள் வேதனை

அறுவடை நடந்து வருவதால் வைக்கோல் விற்பனை தொடக்கம்! ஏக்கருக்கு ரூ. 5,000 கிடைக்கிறது!

100 நாட்களை எட்டிய விவசாயிகள் போராட்டம்! ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)