தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மதுரை ஆட்சியர் சங்கீதா முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: கல்லீரல் பிரச்சனையா? விடுபட வேண்டுமா? எளிய வழிகள் இதோ!
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை கிணறு அல்லது சூரிய ஒளி மின்சார மோட்டார் பொருத்தப்பட்ட பாசன வசதி அமைத்துத் தரப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாகக் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் அல்லது சோலார் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்து இருந்ததை அடுத்து இப்போது இது செயல்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!
அதன் அடிப்படையில் இந்த திட்டத்தினை வேளாண்துறை மதுரை மாவட்டத்தில் 33 பாதுகாப்பான கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதோடு இதனை மதுரை மாவட்டத்தில் பூஞ்சுத்தி, டீ வெள்ளாளப்பட்டி, மேலவளவு, பூதமங்கலம், சுக்காம்பட்டி, பண்ணைக்குடி, பெரிய இலந்தைகுளம், அச்சம்பட்டி, மணியஞ்சி, வடுகப்பட்டி, மேலஉப்பிலிகுண்டு, வளையங்குளம், வீர பெருமாள் புரம், திருமால் உள்ளிட்ட 46 கிராம பஞ்சாயத்துகளில் இது செயல்படுத்தப்பட உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புதிதாக வெளியாகும் கூட்டுறவு சங்கத்தின் கோ பஜார் செயலி!
100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின்மோட்டார் உடன் நுண்ணீர் பாசன வசதி 30 எண்கள் மற்றும் பண்ணை குட்டைகள் 33 எண்கள் செயல்படுத்த இருக்கிறது. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அணுகி பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
காய்கறி பயிரிட மானியம்|புகையிலைக்கு மாற்றாக காய்கறி|ஏக்கருக்கு 8000 ரூபாய்!
மெக்கானிக் வேலை செய்வோர்களுக்கு அறிய வாய்ப்பு: Uzhavan App வரப்போகும் புதிய வசதி