மாநிலப் பாடத் திட்டதின் அடிப்படையில் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. அதன் தேர்ச்சி விகிதங்கள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்திதில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 90.7% மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது. அதோடு, தேர்வு எழுதியவர்களுள் மாணவர்களைவிட மணவிகளே 9% எனும் அளவில் அதிக தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
மேலும் படிக்க: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! முதலிடம் யார்?
வெளியான மதிப்பெண்களின் பட்டியலின் அடிப்படையில், மதிப்பெண்களை நோக்கிக் கீழ்வரும் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
495 க்கும் அதிகமாக 65 மாணவர்களும்
491-495: 564 மாணவர்களும்
486-490: 1,439 மாணவர்களும்
481-485: 2,400 மாணவர்களும்
451-480: 28,178 மாணவர்களும்
401-450: 83,405 மாணவர்களும்
351-400: 1,19,997 மாணவர்களும்
301-350: 1,55,668 மாணவர்களும்
300 க்கும் கீழ்: 520904 மாணவர்களும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
மேலும் படிக்க: 2 ரூபாயில் ரூ. 36,000 பென்ஷன் பெறும் மத்திய அரசின் திட்டம்!
பாட வாரியாகத் தேர்ச்சி விகிதத்தை நோக்கிக் கீழ்வரும் பட்டியல் கொடுக்கப்படுகிறது.
தமிழ் 1 ( 94.84% தேர்ச்சி)
ஆங்கிலம் 45 (96.18% தேர்ச்சி)
கணிதம் 2186 (90.89% தேர்ச்சி)
அறிவியல் 3841 (93.67% தேர்ச்சி)
சமூக அறிவியல் 1009 (91.86 % தேர்ச்சி)
மேலும் படிக்க: பெண்களுக்காக அரசு கொடுக்கும் சிறப்புக் கடன்கள்: இன்றே அப்ளை பண்ணுங்க!
தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வாரியாகத் தேர்ச்சி விகிதங்கள் வருமாறு,
கன்னியாகுமரி 97.22 சதவீதம்
பெரம்பலூர் 97.15 சதவீதம்
விருது நகர் 95.96 சதவீதம்
மிகக் குறைந்த தேர்ச்சி விகிதத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளியாகின்றன. வேலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 79.87% ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க