News

Wednesday, 15 July 2020 05:34 PM , by: Daisy Rose Mary

image credit: Covai post

தமிழகத்தின் கோவை வனச்சரகங்களில் கடந்த 6 மாதங்களில் 15 யானைகள் பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதில் சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் 8 யானைகள் உயிரிழந்தது. இதைதொடர்ந்து. யானைகளின் பிறப்பு, வாழிவிடம், , மனித-விலங்கு மோதல் உள்ளிட்டவை குறித்து ஆராய்து அறிக்கை அளிக்க 11 பேர் கொண்ட நிபுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது.

யானை வாழ்விடங்கள்

தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், மதுரை, தருமபுரி, விருதுநகர், வேலூர் வனக்கோட்டங்கள் எனத் தமிழகம் முழுவதும் யானைகள் இருக்கின்றன. தமிழகத்தில் நிகழ்ந்த மனித- விலங்கு மோதல்களைக் கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ந்ததில், வனத்துக்கு வெளியே விவசாய நிலங்கள், வனத்தை ஒட்டிய பகுதிகளில் மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

யானைகளின் முக்கியத்துவம் கருதி, அவற்றின் வாழிடத்தை மேம்படுத்தவும், இறப்பைக் குறைக்கும் நோக்கிலும், மனித-விலங்கு மோதலைத் தடுக்கவும் விரிவான ஆய்வை மேற்கொள்ள நிபுணர் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவராகக் கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவவலர் சேகர் குமார் நீராஜ், உறுப்பினர் செயலராக மதுரை மாவட்ட வன அலுவலர் எஸ்.ஆனந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிபுணர் குழு உறுப்பினர்கள்

குழுவின் உறுப்பினர்களாகப் பெங்களூருவைச் சேர்ந்த யானைகள் ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், சென்னையைச் சேர்ந்த நிபுணர் சிவ கணேசன், சென்னை இந்திய-அமெரிக்கன் சொசைட்டியின் நிர்வாக அறங்காவலர் அறிவழகன், தேனியைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் எம்.கலைவாணன், சென்னையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் டாக்டர் ஏ.பிரதீப், கோவை டபிள்யு.டபிள்யு.எஃப் அமைப்பைச் சேர்ந்த பூமிநாதன், நிதின் சேகர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீகுமார், மத்திய வனக் குற்றத் தடுப்புப் பிரிவின் பிரதிநிதி ஒருவர் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள் தமிழகக் காடுகளில் யானைகள் நடமாட்டம், அவற்றின் வாழ்விடத்தை மறுசீரமைத்தல் குறித்து ஆராய்வார்கள். மேலும், மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்கான வழிமுறைகள், யானைகளின் பிறப்பு, இறப்பு விகிதம் உள்ளிட்டவற்றை குறித்தும் ஆராய்ந்து, அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கையை முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலரிடம் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

காளான்களை பதப்படுத்தும் மற்றும் விற்பனை முறைகள்!

கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)