1. வாழ்வும் நலமும்

கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!

Daisy Rose Mary
Daisy Rose Mary

Credit : Staywellworld

புற்று நோய்க்கு கொடுக்கும் அலோபதி மருந்துகளை விட முள் சீத்தாப்பழம் அதிக எதிர்ப்பு திறன் கொண்டது என சித்த மருத்துவம் கூறுகிறது. 'கேன்சர் கில்லர்' (Cancer Killer) என அழைக்கப்படும் முள் சீத்தாப்பழம் அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் அருமருந்தாக இருந்து வருகிறது.

முள் சீத்தா (Soursop)

முள் சீத்தா என்றால் ஆங்கிலத்தில் சோர்சாப் (Soursop) எனறு பொருள். தெற்கு அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட முள் சீத்தா மரம், ஈரப்பதம் மிகுந்த வெப்ப மண்டலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் காணப்படுகிறது. முள் சீத்தாப்பழம் 3லிருந்து10 மீட்டர் அளவு வளரக் கூடிய குட்டை மரம். இது கிராவியோலா (Graviola) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழங்களுக்கு தனித்துவமான அமிலச்சுவை உண்டு. பழத்தின் மேற்பரப்பில் காணப்படும் முட்கள், விசித்திரமான வாசனைகளை பரப்பவும், மற்ற சீத்தாப்பழவகைகளில் இருந்து வேறுபடுத்தியும் காட்டுகிறது.

அனைத்திற்கும் மருந்தான முள் சீத்தா பழம் (Best health benefit of all disease)

முள் சீத்தா மனித உடலின் அனைத்து வித செயல்பாட்டிற்கும் நன்கு உதவுகிறது. இவற்றில் அதிகமான ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. இதில் மினரல்கள் (Minerals), புரதம் (Carbohydrates), ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் (Anti-oxidants), கால்சியம் (Calcium), வைட்டமின் ஏ (Vitamin- A), பொட்டாசியம் (Potassium), இரும்பு சத்து (iron), வைட்டமின் பி (Vitamin B) போன்ற மூல பொருட்கள் உடலை சீராக வைக்க பயன்படுகிறது. மேலும் முள் சீத்தாவின் இலைகள், பட்டைகள், மரம், பழம், விதை, வேர் என எல்லாப் பாகங்களும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.

கேன்சர் கில்லர் (Cancer killer)

புற்று நோய்க்கு கொடுக்கும் ரசாயன மருந்துகளை விட முள் சீத்தாப்பழம் அதிக எதிர்ப்பு திறன் கொண்டது என சித்த மருத்துவம் கூறுகிறது. முள் சீத்தா இலைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது. இதில் உள்ள அசிடோஜெனின் (acetogenins), உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை தந்து புற்றுநோய் செல்களை உடலில் வளர விடாமல் தடுக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள் சீத்தா இலைகளை டீ (Tea) போட்டு குடித்து வந்தால், கீமோதெரபிக்கு சமமானது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வயிறு, மார்பு, நுரையீரல், கணையம், மலக்குடல் உள்ளிட்ட பன்னிரெண்டு வகையான புற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான கீமோதெரப்பி முறையைப் பயன்படுத்தினால், முடி கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகியவற்றுடன், மேலும் பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் முள்சீத்தாப் பழம் கொண்டு வழங்கப்படும் சிகிச்சை முறையில் இது போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.

இதய பிரச்சனைக்கு முள் சீத்தா (Cures Heart Disease)

முள் சீத்தாபழத்தில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. இது இதய நோய் பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கும். உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்கிறது. இந்த முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்து வந்தால் இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்க முடியும்.

நீரிழிவு நோய்க்கு மருந்து (Cure Diabetic)

இன்று நம்மில் பலர் எதிர்கொள்ளும் பிரச்சனையாக இருந்து வரும் சர்க்கரை நோய்க்கு, முள் சீத்தா பழம் ஒரு தீர்வாக இருந்து வருகிறது. தினமும் முள் சீத்தா பழ டீயை குடித்து வந்தால் அது சர்க்கரையில் அளவு கட்டுக்குள் வைக்க உதவும் முன் உங்கள் மருத்துவரை அனுகுவது நல்லது.

Credit : The Straits Times

நோய் எதிர்ப்பு சக்தி (Improves immunity)

முள் சீத்தாப்பழம் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியினை அதிகரித்து உடலினை நாள்பட்ட நோய்கள், தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் தினமும் முள் சீத்தா பழ டீயை பருகி வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள இரும்பு சத்து இரத்த நலன்களுக்கு அதிக வலுவை தருகிறது.

இரத்த அழுத்தம், ஆஸ்துமாவை போக்கும் பழம்

மூள் சீத்தா பழம் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, உடல் நடுக்கம், இருதய கோளாறு, கிட்னி பாதிப்பு, இருமல் போன்ற பல்வேறு நோய்களையும் தீர்க்கும் உன்னதமான மருந்தாகும்.

இயற்கையோடு இனைந்த வாழ்வே நோய்நொடியின்று வாழும் முறையாகும். நம் உடலுக்கு தேவையான அனைத்து வித சக்திகளும், ஊட்டச்சத்துகளையும், பழங்கள், காய்கறிகள் மூலமாக இந்த இயற்கை நமக்கு வழங்கி வருகிறது. இவைகளை ஆய்ந்து அறிந்து எடுத்துக்கொண்டாலே செழிப்பாக நலமுடன் வாழலாம்.

மேலும் படிக்க..

சிறுதானியங்களை சீவல்-ஆக மாற்றி விற்பனையில் அசத்தும் ஈரோடு ராஜமணிக்கம்!

வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!

விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்

முறையான பயிர்வாரி சாகுபடி முறைகள் & தொழிநுட்பங்கள் - பகுதி-1!

English Summary: Soursop fruit called Cancer Killer! You know its benefits!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.