நெல் சாகுடிபயை ஊக்குவிப்பதற்காக கேரள அரசு அறிவித்த ராயல்டி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை 60 ஆயிரம் நில உரிமையாளர்கள் ராயல்டிக்கு (Royalty) விண்ணப்பித்துள்ளனர்.
நெல் சாகுபடியாளர்களுக்கு உதவும் இத்திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். விவசாயிகளுக்கு ராயல்டியாக ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
ரூ.40 கோடிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டிலேயே நெல் வயல் உரிமையாளர்களுக்கு ராயல்டி செலுத்தும் முதல் மாநிலம் கேரளமாகும். வயல்கள் அப்படியே வைத்து, பாதுகாத்து நெல் சாகுபடிக்கு தயார் செய்ய வேண்டும்.
நெல் வயலின் அடிப்படை பண்புகளை மாற்றாத பருப்புவகைகள், காய்கறிகள், என் மற்றும் நிலக்கடலை போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிடுவோருக்கும் ராயல்டி கிடைக்கும்.
தற்போது நெல் விதைகள் கிருஷி பவன் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன.
உழவு கட்டணமாக ஒரு ஹெக்டேருக்கு 17.500மும், உற்பத்தி போனஸாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1000மும் மற்றும் நிலையான மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு ஹெக்டேருக்கு ரூ.1500மும் இவற்றோடு மானிய விலையில் உரமும் வழங்கப்படுகின்றன. தமிழக அரசும் இந்த திட்டத்தைக் கொண்டுவந்தால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவர்.
மேலும் படிக்க...
விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!
மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!
குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!