விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
The best opportunity to trade agriculture - the federal government's noble plan to turn young people into entrepreneurs!

உலகையே ஒரு உலுக்கிய கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் பெரும் பாதிக்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையிலும் விவாசயத்தொழிலை லாபகரமானதாக மாற்ற மத்திய -மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, தற்போதைய விவசாய வணிகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. இதில் நீங்களும் விவசாயம் அல்லது அதைச் சார்ந்த துறைகளில் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? 

புதிய திட்டம் (New Scheme)

இந்தத் திட்டத்தின் பெயர் Agriclinic and Agribusiness Centres Scheme (AC&ABC). இதன்படி விவசாயி, விவசாயத்துடன் இணைந்த ஒருவர் அல்லது அதில் சேர விரும்பும் ஒருவர், புதிதாக விவசாய வர்த்தக வணிகத்தை தொடங்க விரும்பினால் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். இந்தக் கடன் அக்ரி கிளினிக் (Agri Clinic) மற்றும் அக்ரி வணிக மைய திட்டம் (Agri Business center scheme) மூலம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் கடன் பெற நினைப்பவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வகுப்பு தேவைப்படும். அதன் பின்னர் நீங்கள் தகுதியுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டால் நபாரட் வங்கி (NABARD வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி) கடன் வழங்கும்.

திட்டத்தின் குறிக்கோள்கள் (Scheme Objectives)

வேளாண் பட்டதாரி, முதுகலை அல்லது டிப்ளோமா படிப்பை முடித்த ஒருவர் விவசாயம் தொடர்பான வர்த்தக வணிகங்களைச் செய்ய உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அந்த பகுதியின் விவசாயிகளின் நிலையையும் முன்னேற்றம் அடையச் செய்ய முடியும் என அரசு நம்புகிறது.

விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)

விவசாய வணிகம் தொடர்பான பயிற்சிக்கு ஒரு கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும். அந்த பயிர்சி மையங்கள் அனைத்தும் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (MANAG - National Agricultural Extension Management Institute) அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிறுவனம் மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது

கடன் தொகையும் & மானியமும்! (Loan And Subsidy)

பயிற்சி முடிந்ததும், விவசாயம் அல்லது அதைச் சேர்ந்த ஒரு தொழிலைத் தொடங்க விண்ணப்பதாரர்களுக்கு நபார்டில் (NABARD Bank) இருந்து கடன் வாங்க முழு உதவி வழங்கப்படும். வேளாண் தொழிலைத் தொடங்க, விண்ணப்பதாரர்களுக்கு (தொழில் முனைவோர்) ரூ .20 லட்சம் வரையிலும், ஐந்து நபர்கள் அடங்கிய குழுவுக்கு ரூ .1 கோடி வரையிலும் கடன் வழங்கப்படுகிறது.

இதில் கூடுதலாக, பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 36% மானியமும், பிற்படுத்தப்பட்ட பிரிவின், பழங்குடி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 44% மானியமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து மேலும் தகவல்களைப் பெற வேளாண் வணிகம் குறித்த கூடுதல் தகவலுக்கு,  1800-425-1556, 9951851556 கட்டணமில்லா எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்
அக்ரி சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை

மேலும் படிக்க...

மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

English Summary: The best opportunity to trade agriculture - the federal government's noble plan to turn young people into entrepreneurs!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.