Krishi Jagran Tamil
Menu Close Menu

மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு

Tuesday, 20 October 2020 10:06 AM , by: Elavarse Sivakumar
Subsidy up to Rs. 40,000 to increase fish stocks - Fisheries Department announcement

மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு அதிகட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

 • தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (NADP) ன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 • இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ விவசாயகள் மானியம் பெறலாம்.

 • இதன்படி மீனவர்கள் உங்களுக்கு சொந்தமான இடத்தில் பண்ணை குட்டை அமைத்து மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு செய்வதற்காக பண்ணை குட்டை அமைத்தல்(1000 செ.மீ), மீன் மீன்குஞ்சுகள், தீவனம் மற்றும் சுற்று வேலி அமைத்தல் ஆகிய செலவீனத்திற்கு மீன்வளத்துறை மூலம் மானியம் 40 சதவீதம் வழங்கப்படவுள்ளது.

 • அதில் ஒரு அலகிற்கு (1000 செ.மீ) அதிகபட்சம் ரூ.99,000 செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ. 39,600 வரை மான்யம் வழங்கப்படுகிறது.

 • விருப்பம் உள்ளவர்கள் முகவரி எண் 5வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலூர்-632006 என்ற விலாசத்தில் செயல்பட்டு வரும் வேலூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 • விண்ணப்பங்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 0416- 2240329.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...

ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை!

PMKSY: பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

மீன் வளர்ப்புக்கு மானியம் 40% சதவீத மானியம் வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Subsidy up to Rs. 40,000 to increase fish stocks Fisheries Department announcement
English Summary: Subsidy up to Rs. 40,000 to increase fish stocks - Fisheries Department announcement

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. விடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்!
 2. செயல்படத் தொடங்கியது பள்ளிகள்! - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை!
 3. எந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..! - விவசாயிகள் திட்டவட்டம்!
 4. விவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது!!
 5. மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு!
 6. பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு!
 7. LIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு!
 8. தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!
 9. பொது மக்களுக்கு இனிப்பான செய்தி! 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி!
 10. PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு! முழு விபரம் உள்ளே!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.