எவ்வளவு உழைத்தாலும், சம்பாதிக்கும் காசு கையில் நிற்கவில்லையே என்று புலம்புபவரா நீங்கள்? இதற்கு ஒரே தீர்வு சொந்தத்தொழில்தான்.
அதுவும் உணவு, வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவை சார்ந்த துறைகளில், குறைந்த முதலீட்டில் சிறு, குறுத் தொழில் தொடங்கினால், எப்போது மார்க்கெட் இருக்கும். அப்படி தொழில் தொடங்க விருப்பமா? இதற்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 75 முதல் 80% மானியம் கொடுக்கிறது அரசு.
தொழில்களும், மானியமும்
அப்பளம் தயாரிப்பு (Papad Manufacturing Unit)
காலம் காலமாக விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில், அப்பளம் மிகவும் முக்கியமானது. சரியான பக்குவத்துடன், உயர் தரத்துடன் தயாரித்தால், விற்பனை ஜோராக நடக்கும். இதற்கு முதலீடாக ரூ. 2 லட்சம் செலவிட வேண்டியிருக்கும். முத்ரா திட்டத்தின் கீழ்
ரூ. 8 லட்சம் வரை வங்கிக்கடன் கிடைக்கும். இந்த தொழிலுக்கு அரசிடம் இருந்து ரூ. 1.91 லட்சம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும்.
அரிசிப்பொடி வியாபாரம்
அரிசி மற்றும் சமையலுக்குத் தேவையான மசாலாப் பொடி வியாபாரத்திற்கு தற்போது மிகுந்த தேவை உள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு இந்த வியாபாரத்தைக் கையில் எடுக்க, ரூ.1.66 லட்சம் ரூபாய் முதலீடாகத் தேவைப்படும்.
முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை வங்கிக்கடன் பெறலாம்.
உட்டன் ஃபர்னிச்சர் வியாபாரம் (Wooden Furniture)
வீடு என்றாலே அதில் மரத்தினால் ஆன மேஜை, நாற்காலி, கட்டில், சோஃபா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதையே மக்கள் மிகப்பெரிய கவுரவமாகக் கருதுவர்.
எனவே இந்த தொழிலுக்கு எப்போதுமே மவுசு அதிகம். சிறிய அளவில் தொடங்கும்போது, ஆரம்ப கால முதலீடாக ரூ. 1.85 லட்சம் தேவைப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் இந்தத் தொழிலுக்கு ரூ. 7.48 லட்சம் வங்கிக்கடன் அளிக்கிறது அரசு.லாபம் ரூ. 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரைப் பெற முடியும்.
கம்ப்யூட்டர் அசம்ப்ளிங் வியாபாரம் ( Computer Assembling Business)
கம்ப்யூட்டர் தொடர்பான வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த தொழில் அசத்தலான லாபத்தை அள்ளித்தரும். ஆரம்பகட்ட முதலீடாக ரூ.2.70 லட்சம் செலுத்த வேண்டும். வங்கிக்கடன் ரூ.6.30 லட்சம் வரைக் கிடைக்கும்.
முத்ரா கடன் எப்படிப் பெறுவது? (How to get Mudra loan)
இந்த தொழில்களைத் தொடங்கி லாபம் ஈட்ட நினைப்பவர்கள், ஆன்லைன் மூலமே முத்ரா திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு வாங்கும்போது, மற்ற வங்கிக்கடனைக் காட்டிலும், முத்ரா வங்கிக்கடனில் 2 சதவீதம் வரை வட்டி குறைவாக செலுத்த வேண்டியது வரும்.
மேலும் படிக்க...
குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!