தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) இளமறிவியல் பட்டப்படிப்பில் 2020- 2021ம் ஆண்டு மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் கடந்த 26.11.20 தொடங்கி நடைபெற்று வருகிறது
இந்நிலையில் பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்கவும், நிவர் புயலின் தாக்கத்தினாலும், தற்போதுள்ள பருவநிலையை கருத்தில் கொண்டும், டிசம்பர் 1ம் தேதி மாலை 5 மணியுடன் முடியவிருந்த இணைதளவழி கலந்தாய்வு 03.12 2020 மாலை 5.00 மணி வரை நிட்டிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே விண்ணப்பித்த மாணவ -மாணவிகள் தங்களது விருப்பப்பாடம் மற்றும் கல்லூரித் தேர்வில் மீண்டும் மாற்றம் செய்ய விரும்பினால் இந்த கால நீட்டிப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதேபோல் இணையதளவழிக் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களது விருப்பப்பாடம் மற்றும் கல்லூரித் தேர்வை உறுதி செய்த மாணவர்கள், மீண்டும் அவர்களது விருப்பத் தேர்வினை மாற்றியமைக்கலாம் என்று கல்லூரி முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கைப்பிரிவு தலைவர் முனைவர் மா.கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!
புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு
மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!