மானிய விலையில் மிளகாய், கத்திரி செடிகள், பெரம்பலூரில் விதைத் திருவிழா, உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் விவசாயிகள் புகார் அளிக்கலாம், லாபம் தரும் மூலிகை உற்பத்தி! விவசாயிகளுக்கு வேளாண் துறையின் ஆலோசனை, தொடர்ந்து சரிவடையும் தக்காளியின் விலை இன்றைய விலை நிலவரம் என்ன? முதலான விவசாயம் சார்ந்த செய்திகளை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: விவசாயிகள் வேறு பயிரை விளைவிக்கத் தயாராகுங்கள்: அரசு
பெரம்பலூரில் விதைத் திருவிழா!
பெரம்பலூர் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகத்த்தில் ஆறாம் ஆண்டு விதைத் திருவிழா வரும் ஜூலை 31-ஆம் நாள் நிகழ உள்ளது. இதனை பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திருவிழாவில் நல்ல தரமான மரபுவகை நெல், நாட்டுக்காய்கறி விதகள், கீரை விதைகள், சிறுதானிய விதைகள் ஆகியன கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அரசு பள்ளிக்கு ரூ. 15 லட்சத்தில் பேருந்து! அசத்திய மாணவர்கள்!!
மானிய விலையில் மிளகாய், கத்திரி செடிகள்!
விருத்தாசலம், காட்டுக்கூடலூர் செல்லும் சாலையில் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 5 லட்சம் முந்திரி கன்றுகள் மற்றும் 10 லட்சம் மிளகாய், கத்தரி கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் மிளகாய், கத்திரி கன்றுகளை விவசாயிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செடிகள் தேவைப்படும் விவசாயிகள் விருத்தாச்சலம் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். முந்திரி கன்றுகள் நாற்பது நூபாய்க்கும், மிளகாய் கத்திரி கன்றுகள் தலா ஒரு ரூபாய்க்கும் வழங்கப்பட இருக்கின்றது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் வாங்கிப் பயனடையுங்கள்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!!
உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் விவசாயிகள் புகார் அளிக்கலாம்
உரம் மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு என்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ போனில் தகவல் தெரிவிக்கலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விழுப்புரத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. உரம் மற்றும் பூச்சி மருந்து தட்டுப்பாடு என்றோலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ வேளாண் உதவி இயக்குனரின் தொலைபேசி எண்ணான் 99761 26021 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விவசாய இடுபொருள் வாங்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு
லாபம் தரும் மூலிகை உற்பத்தி! விவசாயிகளுக்கு வேளாண் துறையின் ஆலோசனை!
மூலைகைப்பயிர் சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல வருமானம் ஈட்டலாம் என காஞ்சிபுரம் வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு இளங்கோவன் கூறியுள்ளார். அருகம்புல், அத்தி, கற்பூரவல்லி, வெட்டிவேர், வல்லாரை, தூதுவளை, நித்தியகல்யாணி உட்பட உள்ள மூலிகை பயிர்களை வளர்க்க விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மூலிகை வியாபாரிகள் வாங்குவதற்கு ஏற்ப மூலிகைகளை ஆராய்ந்து தேர்வு செய்து நடவு செய்தும், ஒப்பந்த அடிப்படையிலும் மூலிகை நாற்றுப் பண்ணைகள் அமைக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: காய்கறி பயிரிட ரூ. 8 ஆயிரம்!
தொடர்ந்து சரிவடையும் தக்காளியின் விலை இன்றைய விலை நிலவரம் என்ன?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 80 முதல் 90 லாரிகள் தக்காளி வரத்து இருப்பதால் தக்காளியின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 8 ரூபாய் முத்ல 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆடி மாதமான இப்பொழுது சுப முகூர்த்த நாட்கள் இல்லாததால் காய்கறிகளின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க