1. விவசாய தகவல்கள்

விவசாயிகள் வேறு பயிரை விளைவிக்கத் தயாராகுங்கள்: அரசு

Poonguzhali R
Poonguzhali R
Farmers get ready to grow another crop: Govt


தமிழகத்தில் சம்பா பருவச் சாகுபடின்பொழுது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு இருப்பதால், நெல்லின் கொள்முதலை ஒரு மாதம் முன்கூட்டியியே தொடங்க அரசு உத்தரவு அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் வேறு பயிர்களை விளைவிக்க தயராகுங்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

சம்பா பருவத்திற்கான சந்தையின் காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை என்பதாகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவச் சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு இருப்பதால், விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

குறிப்பாக, தமிழகத்தில் நெல் கொள்முதலை வழக்கமான அக்டோபர் மாதத்துக்கு பதிலாக ஒரு மாதத்துக்கு முன்கூட்டியே, அதாவது செப்டம்பரிலேயே தொடங்க வேண்டும் என்று அவர் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூன் 21-ந்தேதி கடிதம் எழுதியிருந்தார்.

முதல்-அமைச்சரின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்று கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், 'தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒரு மாதம் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் மாதத்திலேயே தொடங்க அரசு ஒப்புதல் அளித்து உள்ளது' எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு 18.07.2022 தேதியிட்ட கடிதத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, விதைப்பு காலத்திற்கு முன்பே குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படும் என்று கூறிய நரேந்திர சிங் தோமர், இதனால் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு முன்கூட்டியே முடிவை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

இன்றைய செய்திகளும் வேளாண் நடைமுறைகளும்!

ITCMAARS: விவசாய வணிகத்தை மேம்படுத்த App வெளியீடு!

English Summary: Farmers get ready to grow another crop: Govt Published on: 23 July 2022, 11:16 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.