வாழைக்கு என்ன விலை கிடைக்கும்? TNAU-இன் விலை முன்னறிவிப்பு, சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த விவசாயிகளுக்கு அரசு கோரிக்கை, சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் டி5 சூரணம்: சித்த மருத்துவர்கள் அசத்தல், விருதுநகரில் எண்ணெய் விலை உயர்வு! மக்கள் அவதி, SBI இன் அசத்தில் முயற்சி: Whats App-இலயே SBI வங்கிச் சேவை தொடக்கம், வீட்டிற்கே வரும் ஆதார் இணைப்புச் சேவை: நாளை முதல் துவக்கம் முதலான விவசயத் தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.
வாழைக்கு என்ன விலை கிடைக்கும்? தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) விலை முன்னறிவிப்பு!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திர வாழை ஆகிய இரகங்களுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. இதன் அடிப்படையில், ஆகஸ்ட் - செப்டம்பர் 2022 முடிய தரமான பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் 18 எனவும், கற்பூரவள்ளியின் விலை ரூ.20 முதல் 22 எனவும் நேந்திர வாழையின் விலை ரூ.38 முதல் 40 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் படிக்க: வாழைக்கு என்ன விலை கிடைக்கும்? TNAUவின் விலை முன்னறிவிப்பு!
சூப்பர் பாஸ்பேட் உரத்தை பயன்படுத்த விவசாயிகளுக்கு அரசு கோரிக்கை!
டிஏபி உரத்திற்கு மாற்றாகச் சூப்பர் பாஸ்பேட் உரங்களைப் பயன்படுத்துமாறு, நெல் விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டிஏபி உரத்தை மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது. சூப்பர் பாஸ்பேட் உரத்தால் பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிகக்ப்பட்டுள்ளது. எனவே, சூப்பர் பாஸ்பேட் உரத்தை நெல்லிற்கு அடியுரமாக வழங்க அரசால் விவசாயிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம்!
சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் டி5 சூரணம்: சித்த மருத்துவர்கள் அசத்தல்!
சர்க்கரை நோயை குணப்படுத்த டி5 சூரணம் ஆராய்ச்சி முடிந்து தயார் நிலையில் உள்ளதாக உத்தமப்பாளையம் கல்லூரியில் நடந்த சித்த மருத்துவ கருத்தரங்கில், புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குனர் ராஜேந்திர குமார் தெரிவித்திருக்கிறார். கொரோனா உச்சபட்சமாக இருந்த போது கபசுர குடிநீர், அமுக்ரா மாத்திரைகள், நெல்லிக்காய் லேகியம் ஆகியவை குணமடையும் சதவீதத்தை அதிகரிக்க உதவியது. தற்போது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த மருந்துகள், தொற்று நோய் தடுப்பில் சித்த மருந்துகளின் பங்கு பற்றிய விரிவான ஆராய்ச்சி நடக்கிறது. சர்க்கரை நோய்க்கான மருந்து பற்றி ஆராய்ச்சிகள் செய்து டி5சூரணம் தயார் நிலையில் உள்ளது. விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சர்க்கரை வியாதியை குணப்படுத்தும் டி5 சூரணம்: சித்த மருத்துவர்கள் அசத்தல்!
விருதுநகரில் எண்ணெய் விலை உயர்வு! மக்கள் அவதி!!
விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய், வத்தல், துவரம்பருப்பு முதலான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோறும் உணவு பொருட்களின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 1000 உயர்ந்தப்பட்டு 28 ஆயிரம் ரூபாய்க்கும், 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.70 உயர்த்தப்பட்டு 2950 ரூபாய்க்கும், 100 கிலோ துவரம்பருப்பு 9500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
SBI இன் அசத்தல் முயற்சி: Whats App-இலயே வங்கிச் சேவை தொடக்கம்!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) தற்போது WhatsApp banking வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து WAREG என டைப் செய்து ஒரு இடைவெளி ( space) விட்டு உங்கள் (AC NO XXXX) கணக்கு எண்ணையும் டைப் செய்து 7208933148 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புதல் மூலம் தங்கள் பதிவினைச் செய்துகொள்ளலாம்.
வீட்டிற்கே வரும் ஆதார் இணைப்புச் சேவை: நாளை முதல் துவக்கம்!
தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைக்கும் பணி, நாளை துவங்க உள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, ஆதார் எண்களைச் சேகரிக்க உள்ளனர். வாக்காளர்களிடம் 'படிவம் 6பி' வழங்கப்படும் அதில், வாக்காளர் தன் ஆதார் எண்ணை எழுதிக் கொடுக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், தங்கள் வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் உட்பட, தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள, 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் எண்ணை எழுதி வழங்கினால் போதும். அல்லது www.nvsp.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்யலாம். இது தவிர, 'Voter Help Line' மொபைல் செயலி வழியாகவும், ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: நாளை முதல் துவக்கம்!
மேலும் படிக்க
PM Kisan | TN Horticulture |Ration Card Holders | விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!
TNPSC: நில அளவர்-வரைவாளருக்குத் தேர்வு: 1089 காலிப்பணியிடங்கள்!