1. விவசாய தகவல்கள்

வாழைக்கு என்ன விலை கிடைக்கும்? TNAUவின் விலை முன்னறிவிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
What will be the price of bananas ? Price Forecast of TNAU

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய வாழை இரகங்களுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய அறிக்கையின் படி, 2021-22ஆம் ஆண்டு இந்தியாவில், வாழை 9.59 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 351.31 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.

வாழை ரகங்கள்

தமிழகத்தில் பொதுவாக தேனி, கன்னியாகுமரி, கோயம் புத்தூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய ரகங்கள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இவற்றில், பூவன் மற்றும் கற்பூரவள்ளி ஆகியவை இலை நோக்கத்திற்காகவும் பயிரிடுகின்றனர்.

ஆய்வு

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்பு குழு, கடந்த 17 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன். கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

என்ன விலை கிடைக்கும்?

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் - செப்டம்பர் 2022 முடிய தரமான பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் 18, கற்பூரவள்ளி ரூ.20 முதல் 22 மற்றும் நேந்திரன் விலை ரூ.38 முதல் 40 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

தொடர்புக்கு

கூடுதல் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுஆய்வு மையம், தொலைபேசி -0422-2431405, ஆ) இயக்குனர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு பாசன விவசாய நவீன மாயமாக்கல் திட்டம், நீர் நுட்ப மையம், தொலைபேசி - 042 - 6611278. தொழில்நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பழப்பயிர்கள் துறை,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி எண் - 0422 - 6611269 தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!

English Summary: What will be the price of bananas ? Price Forecast of TNAU Published on: 30 July 2022, 11:55 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.