தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 12.07.2023 முதல் 14.07.2023 வரை தோட்டக்கலை துறை சார்பாக அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் சென்ற நிலையில் அங்கு பார்வையிட்ட இடங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் செம்மொழிப் பூங்கா, செங்காந்தள் பூங்கா, மாதவரம் பூங்கா, வண்ணாரப்பேட்டை பூங்கா போன்றவை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காகளாக திகழ்கின்றன.
இப்பூங்காக்களினை சிங்கப்பூர் மற்றும் மேலைநாடுகளில் உபயோகப்படுத்துகின்ற பூங்காக்களின் தரத்திற்கு இணையாகவும் மேலும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையிலும் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்களை மேம்படுத்திட, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையிட்டார்.
முதல்வரின் ஆணைக்கு இணங்க 13.07.2023 அன்று சிங்கப்பூர், தேசிய தாவரவியல் பூங்காவானது எவ்வாறு பராமரிக்கப்படுகிறது எனவும் பூங்காவில் வளர்க்கப்படும் மரங்கள் மற்றும் இதர பூக்கள் வகையறா போன்றவைகள் குறித்து அறிந்துக்கொள்ள அமைச்சர் பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றார்.
அங்கு சிங்கப்பூர் தேசிய பூங்காவின் முதுநிலை பூங்கா இயக்குநர் சூவா ஹாக் சியாங், துணை இயக்குநர் (நூலகம், பயிற்சி மற்றும் விரிவாக்கம், பாதுகாப்பு) பேராசிரியர் நூரா Bte. அப்துல் கரீம் ஆகியோர் அப்பூங்கா எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கினர்.
இதனை தொடர்ந்து தேசிய தாவரவியல் பூங்காவின் துறை அலுவலர்களுடன் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் ஆர். பிருந்தாதேவி இ.ஆ.ப., பூங்காவினை ஆய்வு செய்தனர்.
பின்னர் சிங்கப்பூர் மெரினா நீர்த் தேக்கத்தின் அருகில் Gardens by the Bay என்ற மற்றொரு பூங்காவினையும், முதுநிலை இயக்குநர், பூங்கா பராமரிப்பு கேரி சூவா (Gary Chuo) உதவி முதுநிலை நிர்வாக அலுவலர் மே யோ (May Yeo) ஆகியோர் அப்பூங்காவின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தனர்.
மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து பூக்களின் வகைகள், ரோஜா தோட்டம், உலகிலேயே மிகப்பெரிய செயற்கை நீர்வீழ்ச்சி அமைப்பு, செயற்கை நீர் ஊற்று போன்ற பல புதிய அம்சங்களை பார்வையிட்டு அப்பூங்கா எவ்வாறு கட்டமைக்கப்பட்டு, அதன் பயன்பாடு மக்களுக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை அமைச்சர் நேரடியாக பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.
பூங்காவிலுள்ள மரங்கள் வண்ண விளக்குகளோடு எவ்வாறு காட்சிப் படுத்தப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து 14.07.2023 அன்று சிங்கப்பூர் Jewel Changi பூங்காவினை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் சிங்கப்பூரை சார்ந்த உயர் அலுவலர் பிரபாகர், I.R.S., உடன் இருந்தார்.
இதுபோன்ற முயற்சிகளின் மூலம் தமிழகத்தில் உள்ள பூங்காக்களை மேம்படுத்திட தேவையான திட்டங்களை உருவாக்கிட சிங்கப்பூர் அரசு முறைப் பயணம் மிகவும் உபயோகமாக அமைந்தது என்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
தக்காளியை தொடர்ந்து துவரம் பருப்பு மற்றும் பாமாயில்- அமைச்சர் சொன்ன தகவல்
தானியங்கி முறையில் வில்லங்க சான்றிதழா? பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம்