1. செய்திகள்

தக்காளியை தொடர்ந்து துவரம் பருப்பு மற்றும் பாமாயில்- அமைச்சர் சொன்ன தகவல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Details of procurement palm oil and urad dal in Tamilnadu

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த 928 கோடி ரூபாய் மதிப்பிற்கு பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் செய்துள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், மற்ற காய்கறிகளும் கணிசமாக விலை உயர்ந்தன. காய்கறியினை தொடர்ந்து பருப்பு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கின. இந்நிலையில், விலைவாசி உயர்வினை கட்டுக்குள் வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதுத்தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம் பின்வருமாறு-

வெளிச்சந்தையில் விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தவும் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்திடவும் கலைஞர் அவர்களால் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு மாதம் ஒன்றிற்கு 10,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 10,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்திடக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் விதமாக, உடனடியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்குத் தேவையான 40,000 மெ.டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும் மற்றும் ஜீலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் என மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலக் கிடங்குகளிலும் இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்தக் கிடங்குகளிலிருந்து நியாயவிலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க நியாயவிலைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய் விலையில் வழங்கப்பட்டுவருகிறது. ஜூலை 14 ஆம் தேதி முதல் சென்னையில் ஏழு அமுதம் அங்காடிகளிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் ஏழு நியாயவிலைக் கடைகளிலும், தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய்க்கும், துவரம் பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும், உளுந்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதற்குத் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.

குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மூலமாகவும் இன்றியமையாப் பொருள்கள் பதுக்கப்படாமலிருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தனது அறிக்கையில் அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண்க:

வயலில் நீர் தேக்குவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்

தானியங்கி முறையில் வில்லங்க சான்றிதழா? பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம்

English Summary: Details of procurement palm oil and urad dal in Tamilnadu Published on: 15 July 2023, 06:05 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.