பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 January, 2021 12:48 PM IST

இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கூடிய 2,500 ரூபாய் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பொருட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கத்துடன் கூடிய, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

இதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு (சுமார் 5 அடி நீளம்) மற்றும் துணிப்பை (ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி உருவம் பொறித்தது) வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.2,500 ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் திட்டத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு பண்டக சாலை மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடைக்கு ஏற்ப ‘பேக்கிங்’ செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்துள்ளனர். எனவே ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை மட்டும் எடை போட்டு வழங்கப்பட உள்ளது.

வினியோக நேரம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்டநெரிசலால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாகவும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் என 2 ஷிஃப்டுகளாக பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளது.
அரிசி அட்டைதாரர்கள் எந்த தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கிய டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் காலை வேளையில் 100 பேருக்கும், மதிய வேளையில் 100 பேருக்கும் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

கையில் வழங்க அறிவுரை

ரூ.2,500 வெளிப்படையாக கையில்தான் வழங்க வேண்டும். கவரில் போட்டு வழங்க கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில், அவர்களுக்கு முதலில் பொருட்களை வழங்க வேண்டும். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள் ஏற்படுத்திட வேண்டும். பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம், சமூக இடைவெளி ஆகிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்புடன் பணம் வழங்கல்

ரேஷன் கடைகளில் பண புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை சார்பில் அந்தந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்புடன் ரூ.2,500, பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது.

டோக்கனில் குறிப்பிட்ட நாள் அன்று வர முடியாதவர்கள் 13-ந் தேதி அன்று பணத்தையும், பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு முன்பு பொருட்களை பெற முடியாதவர்கள் 19-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

புகார் அளிக்க எண்?

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் தொடர்பாக தகவல் மற்றும் புகார் ஏதேனும் இருந்தால் 044-2766240 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்கஃ...

நெருங்கும் பொங்கல் பண்டிகை : களைகட்டும் கரும்பு விற்பனை!!

தமிழ்நாட்டில் வளர்ப்புக்கு தடைசெய்யப்பட ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்! குழிதோண்டி புதைத்த அதிகாரிகள்!

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

English Summary: All ration shops will be distributing Rs 2,500 with a Pongal gift package from today
Published on: 04 January 2021, 12:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now