1. செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2500 : அரசாணை வெளியீடு!! திட்டம் இன்று தொடக்கம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்க அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டு உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய 3,75,235 சர்க்கரை அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும். இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு ரூ.2500 வழங்கப்பட உள்ளது.

 

பொங்கல் பரிசாக தலா ரூ.2.500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

English Summary: Tamilnadu CM edapadi Palaniswami Announced Rs.2,500 With Pongal Gift 2021 For all Ration Cards Published on: 21 December 2020, 02:48 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.