News

Saturday, 31 October 2020 09:22 AM , by: Daisy Rose Mary

Credit : Shutterstock

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு தனது அடுத்த தவணை வழங்குதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது வரை பணம் கிடைக்காதவர்கள், ஏழாவது தவணைக்காக காத்திருப்பவர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்

PM-Kisan திட்டம்

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் (PM-Kisan) அமைந்துள்ளது. இந்த திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு மூன்று தவணையாக இந்த பணம் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் 6-வது தவணையை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் விடுவித்தது. வரும் நவம்பர் மாதம் வரை இதற்கான விவசாயப் பயனாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசால் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த தவணை வழங்குவதற்கான பணிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பி. எம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பித்து இது வரை பணம் கிடைக்காதவர்கள், ஏழாவது தவணைக்காக காத்திருப்பவர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

பி. எம் கிசான் நிலை அறிய என்ன செய்ய வேண்டும்?

  • உங்களின் கணக்கு நிலை குறித்து அறிய முதலில் www.pmkisan.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்

    முகப்புப்பக்கத்தில் "Farmers Corner" என்பதைக் கிளிக் செய்க.

  • இப்போது ''Beneficiary status" என்பதைக் கிளிக் செய்க.

  • உங்களின் ஆதார் எண் / கணக்கு எண் / மொபைல் எண் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்

  • பிறகு "Get Data" என்பதை கிளிக் செய்க

  • இப்போது உங்களின் கணக்கு நிலவரங்களை பார்க்கமுடியும்.


உங்கள் கணக்கு இருப்பு நிலை குறித்து தகவலை நேரடியாக அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

Click Direct Link here to Check Beneficiary status 

மேலும் கிசான் திட்டம் தொடர்பான விவரங்களை அறிய உங்கள் வேளாண் அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு அறியலாம்.

பி.எம் கிசான் மொபைல் ஆப் (PM-kisan Mobile app)

விவசாயிகள் PM-Kisan Mobile app-யை பதிவிறக்கம் செய்து தங்களின் நிலை உள்ளிட்ட அனைத்து புதுப்பிப்புகளையும் இதன் மூலம் விரைவாக சரிபார்க்கலாம்.

Download PM Kisan mobile app here 

 

 

இது வரை இந்த திட்டத்தில் இணையாத விவசாயிகள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி லிக்கை பயன்படுத்தி இந்த திட்டத்தில் இணையலாம்.

Click to Register New on PM-Kisan scheme

மேலும் படிக்க..

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு

ஒரே ப்ரீமியத்தில் ஓஹோன்னு வாழ்க்கை : எல்.ஐ.சி-யின் ஜீவன் அக்‌ஷய் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)