பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பூபேந்திர யாதவ், மரக்கன்று நட்டு தமது அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பணிக்கு மரியாதை (Respect for the work)
ஒருவர் தான் சார்ந்த துறை மீது அக்கறையுடனும், கடமை உணர்வுடனும் இருப்பது இயல்பு. ஆனால், தன்னுடையச் தனிப்பட்ட விருப்பம் மூலம், தன் துறையைக்கு மரியாதை செய்வது சிறப்பு
இயற்கை மீது பற்று (Debit on nature)
அந்த வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக இருப்பவர்கள் சிலர், இயற்கை மீது கொண்ட தனியாதப் பாசம் மற்றும் தீராப் பற்று காரணமாக, தங்களின் வாழ்வியலோடு அதனையும் சேர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்.
சுற்றுக்சூழல் ஆர்வலர் (Environmental activist)
அந்த வகையில், பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவர், தாம் ஒரு சுற்றுக்சூழல் ஆர்வலர் என்பதை வித்தியாசமாக நிரூபித்திருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டு, 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.
பொறுப்பேற்பு (Responsibility)
நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தற்போது அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் 7 பெண்கள் உள்பட 43 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். பின்னர் அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அனைவரும் அவரவர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மரக்கன்று நட்டார் (Planted the sapling)
பாஜக தலைவர் பூபேந்திர யாதவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று மரக்கன்று நட்டு தண்ணீர் ஊற்றினார். அதன்பின்னர் அலுவலகத்திற்குச் சென்று பொறுப்பேற்று கோப்பில் கையெழுத்திட்டார்.
தனக்கு இந்த பொறுப்பை ஒப்படைத்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக பூபேந்திர யாதவ் கூறினார்.
மேலும் படிக்க...
உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!