கால்நடை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் 12ம் தேதி திருப்பூர் மாவட்டம் அலகுமலையில், மாபெரும் கால்நடை வார சந்தை நடைபெற உள்ளது.
காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த கால்நடை வார சந்தையில், நாட்டு மாடு, ஜெர்சி இன மாடுகள், எருதுகள், செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் கோழிகளுக்கு தனித்தனி விசாலமான இடத்தில் கால்நடை விற்பனை நடைபெறும். இந்த
கால்நடை சந்தை நடைபெற, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து இச்சந்தை வாரந்தோறும் நடைபெற உள்ளதால், அனைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் கலந்துகொண்டு கால்நடைகளை வாங்கியும், விற்பனை செய்துயும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு
-
திருப்பூரில் இருந்து வந்தால், பெருந்தொழுவு வழியாக 12 கிலோ மீட்டர் தொலைவில் அலகுமலையை அடையலாம்.
-
காங்கயம்-கோவை சாலையில் நாச்சிபாளையம் பிரிவில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்தால், அலகுமலையை அடையலாம்.
விபரங்களை அறிய 98430 62867, 93442 01234 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
PMMSY : கால்நடை வளர்ப்போருக்காக e-Gopala App- அனைத்து தகவலும் உங்கள் கையில்!!
100 சதவீத மானியத்தில் அசில் ரக கோழி வளர்ப்பு- பெண்களுக்கு வாய்ப்பு!