அச்சுறுத்தி வரும் புரெவி புயல் (Burevi Storm) தென் தமிழக கடலோர பகுதியை இன்று நெருங்குகிறது என்றும், கன்னியாகுமரி-பாம்பன் இடையே இன்று நள்ளிரவோ, அல்லது நாளை அதிகாலையோ கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் நேற்று இரவு கரையை கடந்து இன்று அதிகாலை 02:30 மணி அளவில் இலங்கையிலேயே நிலை கொண்டுள்ளது.
-
இது பாம்பனில் இருந்து கிழக்கு தென்கிழக்கே சுமார் 180 கிலோமீட்டர் மற்றும் கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு வடகிழக்கே சுமார் 380 தொலைவாகும்.
-
இந்த புயல் இன்று பகலில் பாம்பன் அருகில் நிலை கொள்ளும். பின்னர் பாம்பன் வழியாக மேற்கு தென் மேற்கு திசையில் தென் தமிழக கடற்கரையை ஒட்டி நகர்ந்து டிசம்பர் 3ம் தேதி நள்ளிரவு அல்லது 4ம் தேதி அதிகாலையில் பாம்பன் கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும்.
-
இதன் தாக்கம் ராமநாதபுரத்தில் தொடங்கி படிப்படியாக கன்னியாகுமரி வரை அதிகரிக்கக்கூடும்.
-
குறிப்பாகத் தாக்கம் தென் கடலோர மாவட்டங்களில் பிற்பகல் 3 மணி முதல் தெரியும். இதன்காரணமாக சிவகங்கை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி-மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக்கூடும்.
-
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Fisherman Warning)
தென்கிழக்கு வங்கக்கடல், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!
புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு
மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!