எதிர்பார்த்தபடி வங்கக்கடலில் புரெவி புயல் (Burevi Cyclone) உருவெடுத்துள்ளது. இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புரெவி புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் எனவும், அப்போது மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் உருவானதன் எதிரொலியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு டிசம்பர் 3-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
-
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, திரிகோணமலைக்கு தென்கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பனுக்கு 470 கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரிக்கு 650 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.
-
இந்த புயலானது டிசம்பர் 3-ந்தேதி (நாளை) மன்னார் வளைகுடா பகுதியைக் கடந்து, 4-ந்தேதி (நாளை மறுதினம்) தென் தமிழகத்தில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது.
-
இதன் காரணமாக, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!
புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு
மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!