News

Sunday, 07 February 2021 03:49 PM , by: Elavarse Sivakumar

Credit : Sunshine Coast

வரும் 11ம் தேதிவரை தமிழகத்தில் வறண்ட வானிலையே (Dry weather) நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

7.02.2021 முதல் 11.02.21 வரை

இன்று முதல் 10ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பனிமூட்டம் (Fog)

அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை (Chennai)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

7.02.21ம் முதல் 9.02.21ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையில் இருந்து பலத்த சூறாவளிக் காற்று, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

100% உத்தரவாதம் அளிக்கும் நாட்டுக்கோழி வளர்ப்பு - நடமாடும் பண வங்கி!!

காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)