News

Thursday, 05 November 2020 08:36 AM , by: Elavarse Sivakumar

Credit : Nakheeran

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின் வினியோக நேரம் மாற்றம் (Time Changed) செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேரத்தைக் கவனத்தில்கொண்டு விவசாயிகள் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

  • விவசாயத்திற்கு தினமும் 6 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

  • டெல்டா மாவட்டங்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரை

  • பிற மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

  • இவ்வாறு  வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தின் விநியோக நேரம் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

  • இதன்படி டெல்டா மாவட்டங்களில் காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையில் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

  • பிற மாவட்டங்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

  • முதல் பிரிவில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும்

  • 2-வது பிரிவில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையிலும் இலவச மின்சாரம் வினியோகம் செய்யப் படும்.

  • இந்த புதிய நேர மாற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)