
கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை இன்று முதல் இந்த மாத இறுதி வரை வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
4000 நிவாரண நிதி அறிவிப்பு
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திமுக அதிக பெரும்பான்மையும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பாக 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையல், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் 3-ம் தேதி தொடங்கி வைத்தார்.
நிவாரண தொகை பெறாதவர்களுக்கு வாய்ப்பு
இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்களும் இன்று முதல் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். அந்தத் தொகையை ரூ.2 ஆயிரம் வீதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.அதன்படி ஜூன் 3-ந்தேதியில் இருந்து முதல் தவணை நிவாரணத் தொகை ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் வெளியூரில் சென்று தங்கியவர்கள், தங்களின் ரேஷன் கடைகளில் அவற்றை பெற முடியாமல் இருப்பதால், ஜூன் மாதத்தில் எந்தத் தேதியிலும் முதல் தவணைத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்படும்
தற்போது இரண்டாவது தவணைத் தொகையான ரூ.2 ஆயிரம், இன்று முதல் வழங்கப்படவுள்ளது. அந்தத் தொகையுடன் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய பையும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அவசரமின்றி அவற்றை பெற்றுக்கொள்ளலாம். 15-ந்தேதி முதல் இந்த மாத இறுதிவரை அவற்றை பெற்றுக்கொள்ளலாம். அவற்றை பெறும்போது ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா? என்பது மாவட்ட கலெக்டரின் தலைமையில் கண்காணிக்கப்படும். 14 மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது - முதல்வர் ஸ்டாலின் உறுதி!
3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
பள்ளிகள் தற்போது திறக்கப்படாது! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு!