News

Monday, 02 January 2023 02:38 PM , by: Poonguzhali R

Covid: Central government talks with Tamil Nadu to buy Kabasura drinking water!

சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாகப் பரவி வருகின்றது. இதன் தாக்கம் இந்தியாவிலும் வந்து விட்டதால் அதனைக் கட்டுப்படுத்த மீண்டும் கபசுரக் குடிநீரை இந்தியா நாடியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

6 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் நவம்பர் மாதம் 4 பேர் குணம் அடைந்து விட்டனர். ஆனாலும் இந்த வகை கொரோனா வேகமாக பரவாமல் இருப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு விமான நிலையங்களில் குறிப்பிட்ட வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்து காய்ச்சல் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தப்பட உத்தரவுகள் விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை விமான நிலையங்களுக்கு வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளை தொடர்ந்து கண்காணித்து தேவைப்பட்டால் பரிசோதனை செய்கின்றனர். இந்நிலையில் கொரோனாவினைக் கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாற்று மருந்தான சித்த மருத்துவ கபசுரக் குடிநீர் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் மக்கள் பயன்படுத்தி வந்த நிலை அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்த கபசுர குடிநீர் பக்கவிளைவு ஏதும் இல்லாத மருந்து என்பதால் தமிழக அரசின் 'டாம்கால் நிறுவனம் கபசுர பொடியை அதிக அளவு தயாரித்து ஒவ்வொரு ஊர்களுக்கும் அனுப்பி வந்தது. தமிழகத்தில் தயாரிக்கும் இந்த கபசுர குடிநீர் பவுடரை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக இந்தியா முழுவதும் வினிநோகிக்கலாமா? என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்கெனக் கபசுர குடிநீர் பவுடரை வாங்குவதற்கு தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

அதிரடியாக உயரும் தங்கம் விலை! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

Pongal Rs.1000: பொங்கல் தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)