
Pongal Rs.1000: Pongal Package Token Distribution From Tomorrow!
பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டிலும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வாண்டு வழங்கப்படும் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.
அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகின்றது.
அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட இருக்கிறது. ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட இருக்கிறது. வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.
வழங்கப்பட உள்ள டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். அதே வேளையில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம்.
பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments