விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு' போல, விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும், என, மத்திய மீன் வளத் துறை இணையமைச்சர் முருகன் தெரிவித்துள்ளார்.
நேரில் ஆய்வு
தெலங்கானா மாநிலம் ஐதராபாதில் தேசிய மீன்துறை வளர்ச்சி வாரியத்தின் செயல்பாடுகளை, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆய்வு செய்தார்.
ஆய்வைத் தொடர்ந்து அமைச்சர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் அவசர தேவைக்காகக் குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதுடன், விவசாயிகளின் நிதித்தேவை அவ்வப்போது பூர்த்தி செய்யப்படுகிறது.
மீனவர்களுக்கும் கடன் அட்டை (Credit card for fishermen)
மீனவர்களின் நிதிச்சுமையை எதிர்கொள்ள ஏதுவாக, விரைவில் மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்படும். இதனால் மீனவர்கள் பயன் பெறுவர். கடல்சார் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஐந்து மீன்பிடித் துறைமுகங்களில் பதப்படுத்தும் பிரிவுகள், குளிர்சாதன கிடங்குகள் ஆகியவற்றை அமைத்து சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடற்பாசி பூங்கா
கடற்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் விரைவில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் படிக்க...
சில தாவரங்களை விதைத்தால் போதும்- சத்துக்கள் தானாகவே வந்துசேரும்!
தக்காளியின் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!