1. தோட்டக்கலை

புடவையாக மாறும் இயற்கைத் தாவரங்கள்- புல்லரிக்க வைக்கும் அழகு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Natural Plants That Will Become Sari- Creepy Beauty!

Credit : Dailythanthi

நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், தாவரங்களின் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் அத்தனை சேலைகளிலும் கொட்டிக் கிடக்கின்றன.

புடவை பாரம்பரியம் (Sari tradition)

புடவை என்ற வார்த்தையே அழகு என்றால், பருத்தி எனப்படும் காட்டன் புடவையைப் பிடிக்காத பெண்களே இருக்கமாட்டார் எனலாம்.
ஏனெனில், அந்தப் புடவைகளின் லுக் எப்போதுமே அழகுதான்.

பல ரகங்கள் (Many varieties)

பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் அதிகமாகவே அறிந்திருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டு புடவைகள் தயாராகின்றன.

குறிப்பாகக் கற்றாழை, சணல், வாழை மற்றும் மூங்கில் நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன என்பதைக் கேட்கும்பொழுது கொஞ்சம் நம்ப முடியவில்லை அல்லவா? இல்லை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில், நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் அத்தனை அழகுக் கொட்டிக்கிடக்கின்றன.

கற்றாழை நார் புடவைகள்

மருந்து மற்றும் அழகு சாதனைப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கி விட்டன என்று சொல்லலாம். நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏக வரவேற்பும் இருப்பதால், அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கிறது.

பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றுகிறார்கள். அதன் பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

விலைக்குறைவு (Inexpensive)

கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆயுள் அதிகம் (Life is long)

சுற்றுச்சூழல் புடவைகளுக்கு பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் அழகியக் கைவண்ணத்தில், கண்கவர் சேலைகள் தயாராகின்றன. இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

ஜூட் புடவைகள் (Jute Sarees)

காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே ஜூட் புடவைகள்.
முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன.

குடும்ப விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்கர்டு பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை.

மூங்கில் பட்டு

மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுக்கு தகுதியானவையாகும்.

இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வரும் மூங்கில் புடவைகள் இயற்கையானவை என்ற நம்பகத்தன்மையை அளிக்கின்றன.

சிறந்த ஜரிகை அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரம்மாண்டத்தைக் கொடுக்கும்.

மேலும் படிக்க...

நவ. 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது- இவர்களுக்கு மட்டும்!

சீனாவில் மீண்டும் கொரோனா- அச்சத்தில் உலக நாடுகள்!

English Summary: Natural Plants That Will Become Sari- Creepy Beauty!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.