Deepavali special offer in ration shops! You know what!
தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை வாங்கும் வகையில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும் 34,773 நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து மளிகை பொருட்களை சேமித்து வைப்பதற்காக 243 கிடங்குகளும், 309 மண்ணெண்ணெய் பங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும் மொத்தம் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். குடும்ப அட்டை மூலம் 6.95 கோடி பயனாளிகள் அரசு வழங்கும் பயன்களை பெற்று வருகின்றனர். இவற்றில் 6.89 கோடி ஆதார் பதிவுகளும், 2.19 கோடி கைப்பேசி பதிவுகளும் உள்ளன.
பயன்பாட்டில் இருக்கும் குடும்ப அட்டைகள்
தமிழகத்தில் ஐந்து வகையான குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் மளிகைப் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது அரசு.
கிடைக்கும் சலுகைகள்
மேலும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பொருட்கள் மற்றும் அதனுடன் ரொக்கமும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே குடும்ப அட்டைகள் வாங்குவதற்கு மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நீங்களும் குடும்ப அட்டை பெற வேண்டும் என்றால் அரசு இ-சேவை மையம் அல்லது tnpds.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிட்டு மற்றும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். தற்போது ஸ்மார்ட்போன்களின் புழக்கம் அதிகரித்து விட்ட சூழலில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஆர்வம் அதிகரித்துள்ளது.
தீபாவளி சிறப்பு அறிவிப்பு
அதனை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது. எனவே முன்கூட்டியே மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ள வசதியாக நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. மேலும் வரும் நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் எண்டுறம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்கள் நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்க இயலாதவர்கள் தீபாவளி முடிந்த பிறகு வாங்கிக்கொள்ள முடியுமா என்ற கேள்வி பலரும் கேட்கின்றனர். இந்த கேள்விகள் குறித்து விளக்கமளித்துள்ளத் துறை அதிகாரிகள், தீபத் திருநாள் முடிந்த பின்னர் நவம்பர் 7 ஆம் தேதி முதல் வழக்கம் போல் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் படிக்க:
Ration Card: புதிய ரேசன் கார்டுக்கு 10 லட்சம் விண்ணப்பங்கள்!