இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண்மை கல்லூரி மாணவ - மாணவிகள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு இயற்கை பூச்சி விரட்டியான (Natural insect repellent) அமிர்த கரைசலை, தயாரித்து செயல் விளக்கம் அளித்தனர்.
இயற்கை பூச்சி விரட்டி
கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு வேளாண்மை கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து தங்கி இருந்து விவசாயிகளின் தோட்டங்களை ஆய்வு செய்து உற்பத்தியை (Production) பெருக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடுமியாண்மலை அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சேந்தன்குடி கிராமத்தில் விவசாயிகளிடம் இயற்கையான பூச்சி விரட்டியான அமிர்த கரைசல் தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். அதே போல ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறைகளையும் செய்து காட்டினார்கள்.
செயல் விளக்கம்:
இதேபோல் பொன்னமராவதி அருகே கொன்னையூர் கிராமத்தில் குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் களப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் கல்லூரி முதல்வர் செங்குட்டுவன், பேராசிரியர் மாரிமுத்து, உதவி பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு ஒருகிணைந்தப் பண்ணையம் அமைத்தல், அதன் நன்மைகள், காய்கறி பயிரில் பூச்சி மேலாண்மை, தேனீ வளர்ப்பின் நன்மைகள் (Benefits of Honey bee keeping) குறித்தும் விளக்கப்பட்டது. அதன்பின்பு பூச்சி மருந்து பயன்பாட்டினை குறைத்திட சூரிய விளக்குப் பொறியினை பயன்படுத்த வலியுறுத்தினர்.
விழிப்புணர்வு:
வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறவும், நோய்க்கட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் பல்வேறு பயிற்சிகளை (Training) செயல் விளக்கத்துடன் அளித்து வருகின்றனர். விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பயிற்சி பெறுகின்றனர். நோய்க்கட்டுப்பாடு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, கூடுதல் வருமானம் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். சரியான விழிப்புணர்வு (Awareness) தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும். அந்த வகையில் வேளாண் கல்லூரி மாணவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தென்னையில் வேரூட்டம் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்!
வெப்ப அயற்சியிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க தெளிப்பான்களை உபயோகிக்கலாம்! ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!