மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருப்பதால், சற்று விழிப்புடன் இருக்குமாறு தங்கள் 42 கோடி வாடிக்கையாளர்களுக்கு SBI (State Bank of India) நிர்வாகம் எச்சரிக்கை (Warning) விடுத்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கு விபரம், Pin Number உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டு பணத்தை எடுத்தல் உள்ளிட்ட மோசடிகள் அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் போலியாக தகவல் அனுப்பி அவர்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொண்டு மோசடி செய்வது அம்பலமாகி வருகிறது.வங்கி சார்பில் Pin Number உள்ளிட்ட எந்த ஒரு ரகசியத் தகவலும் கேட்கப்படவில்லை. எனவே சமூக வலைதளங்களிலும், மின்னஞ்சலிலும் வரும் தகவல்களை ஆராய்ந்து பதிலளிக்கவும்.
வங்கிக்கணக்கு தொடர்பான ரகசியத் தகவல்களை வங்கி நிர்வாகம் ஒருபோதும் கேட்காது என்பதைக் கவனத்தில்கொண்டு விழிப்புடன் இருக்குமாறு தங்களது 42 கோடி வாடிக்கையாளர்களுக்கு SBI நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் படிக்க...
வேளாண் கடன் வேண்டுமா? 4 வங்கிகளின் சிறந்த கடன் திட்டங்கள்!
இவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?
எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App