தமிழகம் 2022 - 23ம் நிதியாண்டில், 16,810 கோடி ரூபாய்க்கு தோல் மற்றும் தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அனைத்து மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
தற்பொழுது முதலிடம் பெற்றுள்ளது என்பதையும் தாண்டி குறிப்பாக, சென்ற 2017 - 18 முதல், தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக தமிழகம் முதல் இடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது எனவும் பின்வரும் தகவல்களையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!
சென்ற 2022 - 23ம் நிதியாண்டில், தமிழகத்தில் இருந்து 16,810 கோடி ரூபாய் மதிப்பிலான தோல் மற்றும் தோல் பொருட்கள் வெளிநாடுகளுக்கு சிறப்பாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, 2021 - 22ம் நிதியாண்டில், 13,940 கோடி ரூபாயாக இருந்தது என்பது நினைவுக்கூறத் தக்கது. தற்போது, 43 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதோடு தற்பொழுது வரை தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
மேலும் படிக்க: பாரம்பரிய விவசாயத்திற்கு மானியம்|மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
உத்திரப் பிரதேச மாநிலம், 10,000 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதோடு, மேற்கு வங்கம், 5,953 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. தமிழகம், கடந்த 2017 - 18ம் நிதி ஆண்டு முதல், 2022 - 23 வரை, ஆறு ஆண்டுகளாக தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தி முதல் கல்லீரல் பிரச்சனை வரை! அற்புதமான பலன்களை அள்ளித் தரும் பழம்!
அதே போன்று, உத்திரப் பிரதேச மாநிலம், ஆறு ஆண்டுகளாக இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கம் 2019 - 20 முதல், 2022 - 23 வரை என, கடந்த நான்கு ஆண்டுகளாக மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
நடப்பு நிதியாண்டிலும், இதுவரையிலும் 2,400 கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, தமிழகம் முதல் இடத்தில் இன்று வரை நீடிக்கிறது என்பது கூடுதல் தகவலாக இருக்கின்றது.
மேலும் படிக்க