1. வாழ்வும் நலமும்

எந்த நோயும் வராமல் இருக்க வேண்டுமா? 10 நிமிடம் இதைச் செய்யுங்க போதும்!

Poonguzhali R
Poonguzhali R
Do you want to avoid any disease? Just do it for 10 minutes!

யோகா உடலுக்கும்சரி மனதுக்கும்சரி அமைதியையும், ஆற்றலையும் கொடுக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரியக் கலையான இந்த யோகாசனத்தினை இளம் வயதிலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனப் பல நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அந்த வகையில் இருக்கும் யோகாசனத்தினால் பெண்கள் அடையும் பலன்களை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: பாரம்பரிய விவசாயத்திற்கு மானியம்|மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்! 

யோகாவின் பலன்கள்

  • யோகா செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்.
  • ஒருவருடைய கவனிக்கும் திறனும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
  • இரத்த ஓட்டம், நரம்பு மற்றும் சுவாச மண்டலம், செரிமான மண்டலம் போன்றவை சீராக அமையும்

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!

யோகா பெண்களுக்கு எவ்வகையில் பலன் அளிக்கிறது?

வயது ஆகும்பொழுது பெண்கள் யோகாசனம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. புஜங்காசனம் செய்வது உடலின் மேற்பகுதியினை நீட்சி அடைய செய்து முகத்தின் பளபளப்பினை அதிகரிக்கிறது.

பட்டர்ஃபிளை போஸ் பெண்களுக்கு அதிகபட்ச நன்மைகளைத் தருகின்றது. இதனைத் தினமும் செய்து வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாயைச் சீராக்கலாம். இதனுடன் தொடை மற்றும் கால்களின் தசைகளையும் வலுப்படுத்தலாம். தனுராசனத்தினைத் தினமும் செய்து வந்தால் உடல் எடையினை கட்டுக்குள் வைத்திரு உதவும்.

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தி முதல் கல்லீரல் பிரச்சனை வரை! அற்புதமான பலன்களை அள்ளித் தரும் பழம்!

பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் கொழுப்பு சேரத் தொடங்கும். வீரபத்ராசனம் செய்வதால் மார்பு, வயிறு, நுரையீரல், கழுத்து, முதலான உடலின் பகுதிகள் நீட்சி அடைகின்றன. மேலும், கால், தொடை மற்றும் முழங்கால் வலிமை பெறும்.

மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!

உட்க்கடாசனத்தினைச் செய்வதன் மூலம் உடல் பாகங்கள் வலுவடைவதோடு மட்டுமின்றி நல்ல கட்டான உடல் வடிவம் பெறலாம். கைகளின் அசைவுகளால் செய்யப்படும் இந்த முத்திரையைகள் ஐம்புலன்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றது. தியான முத்ரா, ஞான முத்ரா, யோனி முத்ரா, பிருத்வி முத்ரா முதலான பல வகையான முத்திரைகளைச் உடலுக்கு மிகுந்த நல்லதை அள்ளித் தருபவையாக இருக்கின்றன.

தியானம் பயிற்சி செய்யும் பொழுது முத்திரைகளைப் பயன்படுத்தலாம். யோனி முத்திரை செய்வது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயனுள்ளதாக அமைகின்றது.

சூரிய நமஸ்காரம், ஜல நமஸ்காரம், சந்திர நமஸ்காரம், பிரித்வி நமஸ்காரம், வாயு நமஸ்காரம் முதலான ஆசனங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருபனவாக இருக்கின்றன. எனவே, யோகாவினை அன்றாட வாழ்வில் ஒரு அங்க்கமாக வைத்துச் செய்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

மேலும் படிக்க

PM Kisan ரூ.2000! வெளியான புதிய அப்டேட்!

புதிதாக வெளியாகும் கூட்டுறவு சங்கத்தின் கோ பஜார் செயலி!

English Summary: Do you want to avoid any disease? Just do it for 10 minutes! Published on: 28 June 2023, 06:14 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.