News

Saturday, 27 May 2023 01:00 PM , by: Poonguzhali R

Farmers Grievance Meeting on May 30! Collector announcement!

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகளின் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருப்பூரின் விவசாயிகள் குறைதீர்க்கும் வகையில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

திருப்பூரில் விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டமானது வருகின்ற மே 30-ஆம் தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருக்கின்றது. அதோடு, வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட இருக்கிறது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள குறிப்பு அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு: திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30-ஆம் தேதி காலை 10 மணிக்குத் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க இருக்கிறது.

கூட்டத்தில் முதலாவதாக திருப்பூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிட வேண்டும் எனவும், அதன் பின்பு பதிவு செய்யப்பட்ட விவசாய சங்க ங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளைத் தொகுத்துக் கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவித்திடக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் வகையில், வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல்துறை அலுவலர்கள் முதலானோர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமை க்கப்பட இருக்கிறது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு இருக்கிறது.

விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களின் தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்சார்ந்த துறைகளால் அமைக்கப்பட இருக்கின்ற கருத்துக்காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க

மீன் வளர்ப்புக்கு மானியம்! ஆட்சியர் அறிவிப்பு!!

குடிநீரில் குரோமியம்! ஓசூரில் வாழ்வாதாரம் பாதிப்பு!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)