1. செய்திகள்

குடிநீரில் குரோமியம்! ஓசூரில் வாழ்வாதாரம் பாதிப்பு!!

Poonguzhali R
Poonguzhali R
Chromium in drinking water! Livelihood affected in Hosur!!

ஓசூர் வார்டு 18ல் உள்ள நிலத்தடி நீரில் குரோமியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே, குடிநீர் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இல்லை. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நிலத்தடி நீர் மாசுபட்டதாக நேதாஜி நகர் பகுதிவாசிகள் கூறுகின்றனர். தொழில்துறை அலகுகளை குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஓசூர் வார்டு 18 ல் உள்ளவர்களுக்குத் தோல் ஒவ்வாமை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் வார்டு 18ல் உள்ள நேதாஜி நகரில் உள்ள நிலத்தடி நீரில் குரோமியம் கலந்திருப்பதாகவும், பயன்படுத்துவதற்கு தகுதியற்றதாக இருப்பதாகவும் ஓசூர் மாநகராட்சி நடத்திய முதற்கட்ட சோதனை முடிவு தெரியவந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இப்பகுதிக்கு தற்காலிகமாக டேங்கர் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் இருந்து தண்ணீர் எடுக்க, 30 லட்சம் ரூபாய் செலவில் குழாய் பதிக்கப்பட்டது.

ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நிலத்தடி நீர் மாசுபட்டதாக நேதாஜி நகர் பகுதிவாசிகள் கூறுகின்றனர். தொழிற்சாலைகள் மீது பழி சுமத்துகின்றனர். இதைத் தொடர்ந்து, எச்எம்சி ஏப்ரல் 11 ஆம் தேதி 15 இடங்களில் (இரண்டு எச்எம்சி போர்வெல்கள் மற்றும் 13 தனிப்பட்ட போர்வெல்கள்) தண்ணீர் மாதிரிகளை சேகரித்து கோயம்புத்தூரில் உள்ள தலைமை நீர் ஆய்வாளர் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பியது.

HMC கமிஷனர் சினேகா குறிப்பிடுகையில், அதிகாரபூர்வ நீர் பரிசோதனை முடிவை இன்னும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு ஆரம்ப மற்றும் அதிகாரப்பூர்வமற்ற அறிக்கை கிடைத்த நிலையில், அதில் குரோமியம் நிலத்தடி நீரில் காணப்படுவதாகவும், எனவே அதை எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

ஒரு சில வாரங்களுக்கு தண்ணீர் டேங்கர் மூலம் எச்எம்சி தண்ணீரைப் பெறும் அந்த பகுதிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரூ.30 லட்சம் மதிப்பில் 2,200 மீட்டருக்கு குழாய் பதிக்கப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டு ஜூன் 9ம் தேதி ஏலம் திறக்கப்படும் என சினேகா தெரிவித்துள்ளார். ஓசூரில் உள்ள TNPCB அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற அறிக்கையை அனுப்பியதாக சினேகா மேலும் கூறினார். அதிகாரப்பூர்வ அறிக்கை TNPCB க்கும் அனுப்பப்படும், அதன் அடிப்படையில் அவர்கள் மாசுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

கால்வாய்களை தூர்வார கன்னியாகுமரி விவசாயிகள் கோரிக்கை!

நாட்டிலேயே சிறந்த நகரம்! கோவைக்கு அடிச்சது ஜாக்பாட்!!

English Summary: Chromium in drinking water! Livelihood affected in Hosur!! Published on: 27 May 2023, 11:32 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.