இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 April, 2022 4:28 PM IST
Flower Price rises in Tamilnadu..!

தேவாளையில் பூ விற்பனைக்கு என்று பிரசித்திப் பெற்ற பூ மார்க்கெட் உள்ளது.  அங்கு குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் ஏனைய பிற பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு என கொண்டு வரப்படுகிறது.  அதோடு தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் பூக்களைப் போட்டிப் போட்டு வாங்கிச் செல்கின்றனர். 

ஒரு கிலோ ரூ 350-க்கு விற்ற மல்லிகைப் பூ தற்போது கிலோ ரூ. 1000 எனும் நிலைக்கும்,  ரூ.1500-க்கு விற்ற பிச்சிப்பூ தற்போது 2250-க்கும் விற்கப்படுகிறது.  இதே போல ஒவ்வொரு பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.  குமரி மாவட்டம் மட்டுமல்லாது, கரூர் மாவட்டம், ப. வேலூர் வட்டாரப் பகுதி, திருப்பூர் பகுதி ஆகிய பிற பகுதிகளிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.  இந்த வட்டாரப் பகுதிகளில் விளையும் பூக்களை ஏலச்சந்தைக்குக் கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். 

மல்லிப்பூ, பிச்சிப்பூ ஆகியவற்றைத் தொடர்ந்து, முல்லைப் பூ, சம்பங்கி, செவ்வந்தி, கனகாம்பரம், ரோஜா, துளசிக் கட்டு ஆகியனவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பூக்களின் விலை ஏற்றம் குறித்துப் பூ வியாபாரி கூறுவதாவது, நாளை சித்திரை முதல் நாள் என்பதால் இவ்விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.  அதோடு பூக்களின் வரத்துக் குறைவு காரணமாகவும் பிச்சி, மல்லிகை போன்ற பூக்களின் விலை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

இத்தகைய விலையேற்றம் பூக்களை விளைவிக்கும் பூ விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.  விலையும் அதிகரித்து உள்ளது.  விலை அதிகரித்தாலும் மக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.  இந்த நிலை பூ வியாபாரிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பூக்களை ஏலம் மூலம் கொள்முதல் விலையில் வாங்கிச் சென்று வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் அதிகப் பயனைத் தருவதாக இவ்விலை உயர்வு அமைந்துள்ளது.    

மேலும் படிக்க...

ஆவின் பால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிப்பு!

பழங்களின் விலை கிடுகிடு உயர்வு!!!

English Summary: Flower Price rises in Tamilnadu..!
Published on: 13 April 2022, 04:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now