1. Blogs

பண்டிகையை தொடர்ந்து பூக்களின் விலை அதிகரிப்பு: உச்சத்தில் மல்லிகையின் விலை

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Local Flower Market in Madurai

பூக்கள் இல்லாமல் பண்டிகைகளும், திருவிழாக்களும் முழுமை பெறாது.  முகூர்த்தத் தினங்களும் அடுத்தடுத்து வர இருப்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மல்லிகைக்கு பெயர் பெற்ற மதுரையில் மல்லிகைப்பூக்கள் கிலோ ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனையானது.

மதுரை மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான திருமங்கலம், திருப்பரங்குன்றம், எலியார்பத்தி ஆகிய இடங்களில் இருந்து மல்லிகைப் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வந்து மாட்டுத்தாவணி பூ சந்தையில் விற்பனை செய்யப் படுகிறது.

பருவமழை, பனிபொழிவு, புயல்சின்னம் போன்ற காரணங்களால் மல்லிகைப் பூ விளைச்சல் வெகுவாக  குறைந்துவிட்டது. வரத்து குறைந்ததை அடுத்தும், முகூர்த்தத் தினங்களும், பண்டிகைகளும் அடுத்தடுத்து வருவதை தொடர்ந்து மல்லிகைப் பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து. நாளை முதல் பொங்கல் விழாக்கள்  தொடங்க இருப்பதால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்திற்கு வரை விற்பனை செய்யப் படுகிறது.

பூக்களின் விலை பட்டியல் (1 கிலோ)

மல்லிகைப்பூ - ரூ.5000

மெட்ராஸ் மல்லி - ரூ.1500

முல்லை - ரூ.2000

அரளி - ரூ.250

செவ்வந்தி - ரூ.120

சம்பங்கி - ரூ.150

மரிக்கொழுந்து - ரூ.100

செண்டுப்பூ -  ரூ.70

English Summary: Today Flower Rate: Across Tamilnadu All the flowers price has increased due to pongal and upcoming festival Published on: 14 January 2020, 02:42 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.