நாடே கொரோனா அச்சத்தின் பிடியில் உள்ள நிலையில், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டும் உணவு வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது, நோய்களில் இருந்து தப்பிக்க வழிவகுக்கும்.
அந்த வகையில், இந்திய உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI ( Food Safety and Standards Authority of India ) ஒமேகா -3 ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ள உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதால், நோய் எதிர்ப்புச் சக்தியைஅதிகரித்துக்கொள்ள முடியும் என்று அறிவுரை வழங்கியுள்ளது.
FSSAIயின் வழிகாட்டுதல்கள்
பூசணி விதை (Pumpkin Seeds)
பூசணி விதைகளில் Anti-oxidants நிறைந்துள்ளன. இவை சிறுநீரகப் பையின் அரோக்கியத்தையும் தூண்டுகின்றன. இந்த விதையில் அதிகளவு உள்ள மெக்னீசியம் (magnesium) ரத்த அழுத்தத்தையும், சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துவதுடன், இதயத்திற்கும், எலும்புகளுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறது.
கம்பு (Bajra)
கம்பு மாவில் செய்யப்படும் உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. இவ்வாறு உணவில் சேர்த்துக்கொள்வதால், ரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்து, ரத்தம் சீராகப் பாய்வதற்கு கம்பு உதவுகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து, உடலில் கொட்ட கொழுப்பு தேங்குவதைக் குறைக்கிறது.
வால்நட் (Walnuts)
இதில் இடம்பெற்றுள்ள antioxidants கெட்ட கொழுப்பைக் கறைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. மேலும் Type-2 நீரழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.
தர்பூசணி விதைகள்
இரும்புச்சத்து நிறைந்துள்ள இந்த விதைகள், ரத்தத்தில் உள்ள ஹீமோக்குளோபினுக்கு இன்றியமையாததாகத் திகழ்கிறது. மேலும் உடல் முழுவதும் ரத்தம் சீராகப் பாய்வதற்கும் வழிவகை செய்கிறது.
ராஜ்மா (Rajma)
கிட்னி பீன்ஸ் (kidney beans) என அழைக்கப்படும் ராஜ்மாவில், வைட்டமின் k1, இரும்பு, தாமிரம், மெக்னீசியம், பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக நார்ச்சத்துகொண்ட ராஜ்மா சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துத் தருகிறது.
வெந்தயக் கீரை (Fenugreek Leaves)
வெந்தயக் கீரை நீரழிவு நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் நெஞ்சுஎரிச்சல் மற்றும் உடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
எனவே இந்த உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொண்டு, நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரித்துக்கொண்டு, நோயின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் படிக்க...
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!