தென்காசி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே அமைந்து இருக்கும், உழவர் சந்தை கடந்த 2000ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். இங்கு, 60 கடைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது 9 கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது குறிப்பிடதக்கது.
இந்த உழவர் சந்தையில் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 1 லட்சம் கிலோ காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது தனியார் வியாபாரிகளின் ஆதிக்கத்தால் உழவர் சந்தைக்கு மக்கள் வரத்து கணிசமாக குறைந்திருக்கிறது.
இதனால் உழவர் சந்தையில் விற்பனை மந்தமாகி இருப்பது குறிப்பிடதக்கது. இதன் காரணமாக உழவர் சந்தையில் வணிகம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு, நாள் ஒன்றுக்கு 5 கிலோ வரையில் காய்கறிகள் விற்பனை ஆவதே கேளிவிக்குரியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதனை சரிசெய்யும் வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால் சுந்தர்ராஜ் இன்று தென்காசி உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் என்பது சிறப்பாகும்.
காயான பிறகு பூவாவது எது? பழமான பிறகு காயாவது எது?
அப்போது, விவசாயிகளிடம் மாவட்ட கலேக்டர் குறைகளை கேட்டறிந்தார். மேலும், உழவர் சந்தையை பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்க வேண்டும் என விவசாயிகளும், வணிகர்களும் கோரிக்கை விடுத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
100 ரூபாய் நாணயமாக அறிமுகம்: ஏன்?
இது குறித்து வியாபாரிகளிடம் கேட்கப்பட்டபோது, ' இங்கு வியாபாரம் எதுவும் நடப்பதில்லை. எவ்வளவு வியாபாரம் ஆன சந்தை இது. இன்றைக்கு சுத்தமாகவே வியாபாரமே இல்லை. எனவே சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற, கலேக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்' என்றனர்.
மேலும் படிக்க:
வரும் நாட்களில் எந்தெந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க - Last date!