கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க ஏதுவாக, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துகொள்ளுமாறு (Crop Insurance) பெரம்பலூர், தென்காசி உள்ளிட்ட 3 மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் தற்போது ராபி பருவத்தில் சாகுபடி செய்யும் வெங்காயம், மரவள்ளி, தக்காளி ஆகியவற்றுக்கு பயிர்காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
பயிர் காப்பீடு (Crop Insurance)
இதன்படி டிசம்பர் 18ம் தேதிக்குள் வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ.1.860ம், பிப்ரவரி 15ம் தேதிக்குள் தக்காளிப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.764ம், மார்ச் 1ம் தேதிக்குள் மரவள்ளிக் கிழங்கிற்கு ஏக்கருக்கு ரூ.1,440ம், பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், தொடர்மழை காரணமாக மகசூல் இழப்பை ஈடு செய்ய ஏதுவாக, உளுந்து, பாசிப்பயறு பயிர்களுக்கு காப்பீடு செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்காசி மாவட்டத்தில் பலத்த மழை குறைக்காற்று வீசும் என வானிலை முன்னறிவிப்பு செய்யதிருப்பதால் விவசாயிகள் தங்களுடைய பயிர்களை காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, துவரை, பருத்தி நிலக்கடலை, சூரியகாந்தி, எள் உட்பட ராபி பருவ பயிர்களுக்கு 2020-21ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவைத் தெரிந்துகொண்டு, விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க...
பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!
தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!