News

Thursday, 01 September 2022 12:17 PM , by: Elavarse Sivakumar

சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.

பெண்கள் விரும்பி அணியும் அணிகலன்களில் தங்கத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஏனெனில், சமூகத்தினரிடையே தங்கம் தரும் கவுரவமேத் தனிதான். கவரிங் நகைகள் எத்தனை அணிந்தாலும், ஒரு தங்க அணிகலனை அணியும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. எனவேதான் பெண்கள் எப்போதுமே தங்கத்தை வாங்கி சேமிக்க விரும்புகிறார்கள்.

போர் பதற்றம்

உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் 6 மாதங்களைக் கடந்துவிட்டநிலையிலும், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது.

ரூ.640

இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்று தங்கத்தின் விலையில் திடீர் சரிவு காணப்படுகிறது. அதாவது 2 நாட்களில் சவரனுக்கு 640 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் சரிந்து, ஒரு கிராமம் 4,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 37,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் 4,790 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 38,320ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருமண சீசன்

ஆவணி மாதத்தில் அதுவும் திருமண சீசனில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க...

ஜெயலலிதா மரணம் : விசாரணை வளையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர்!

கணக்கு ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மாணவர்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)