1. செய்திகள்

சிலிண்டர் விலை ரூ.96 குறைந்தது- விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Cylinder price reduced by Rs.96- details inside!

மக்களை வாட்டி வதைத்து வரும் பிரச்னைகளில் சிலிண்டர் விலையும் ஒன்று. இந்நிலையில், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.96 குறைந்திருக்கிறது. இந்த அறிவிப்பு வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

நஷ்டம்

சிலிண்டர் வினியோகஸ்தர்கள் ஆயிரக்கணக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை இருப்பு வைத்து இருப்பார்கள். தற்போது சிலிண்டர் விலை ரூ.96 குறைக்கப்பட்டதால் வினியோகஸ்தர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

விலை நிர்ணயம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி பொதுவாக எண்ணெய் நிறுவனங்களால் சமையல் கியாஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ரூ.2045 ஆக

அந்த வகையில் இன்று வணிக பயன்பாட்டிற்காக கியாஸ் சிலிண்டர் விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.96 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.2,141-க்கு விற்கப்பட்ட வணிக சிலிண்டர் தற்போது ரூ.2045 ஆக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மிக குறைந்த அளவில் சிலிண்டர் விலை குறைந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் ரூ.96 குறைந்து இருப்பதால் ஓட்டல், டீக்கடை உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திற்கு பயன்படுத்தக் கூடிய வர்த்தக பிரமுகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வரவேற்பு

கடந்த மாதங்களைவிட இந்த மாதம்தான் விலை குறைக்கப்பட்ட விகிதம் அதிகமாகும். சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை வர்த்தக பயன்பாட்டுக்கு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதன் விலை குறைக்கப்பட்டதை வரவேற்றுள்ளனர்.

லட்சக்கணக்கில்

அதே நேரத்தில் 2, 3 நாட்களுக்கு தேவையான சிலிண்டர்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து கொண்டதன் மூலம் பலருக்கு நஷ்டமும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக சிலிண்டர் வினியோகஸ்தர்கள் ஆயிரக்கணக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்களை இருப்பு வைத்து இருப்பார்கள். தற்போது சிலிண்டர் விலை ரூ.96 குறைக்கப்பட்டதால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

ஏமாற்றம்

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட போதிலும் வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை. 14 கிலோ எடையுள்ள அந்த சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1068.50-க்கு விற்கப்படுகிறது. இந்த மாதமாவது வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த இல்லத்தரசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மேலும் படிக்க...

ஜெயலலிதா மரணம் : விசாரணை வளையத்தில் சசிகலா, விஜயபாஸ்கர்!

கணக்கு ஆசிரியரை கட்டி வைத்து அடித்த மாணவர்கள்!

English Summary: Cylinder price reduced by Rs.96- details inside! Published on: 01 September 2022, 12:04 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.