சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து உயரும் விலையால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்து இருந்தது. அதன் பின்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது, குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ 120 உயர்ந்து 41,040 ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை, இன்று 160 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் ஒருகிராம் தங்கத்தின் விலை ரூ.5552ஆக இன்று விற்பனையாகிறது.
அதன்படி ஒரு சவரன் 41,200 ரூபாயாக விற்பனையாகின்றது. அதேபோல ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து 74.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையே தொடர்ந்தால் இந்த வருடம் முடிவதற்குள் தங்கம் விலை கிராமிற்கு 6000 ரூபாயைத் தாண்டும் என கூறுகிறார்கள் வல்லுனர்கள். இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க
Pongal Rs.1000: பொங்கல் தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்!