Good news folks! The price of gold fell! Do you know how much?
நேற்டைய தினம் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. எவ்வளவு குறைந்துள்ளது, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதை இப்பதிவு வழங்குகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
டாலர் மதிப்பு உயர்ந்து வருவது, வட்டி முதலான காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்துகொண்டு இருக்கிறது. எவ்வளவு சரிவு அடைந்துள்ளது? இன்றைய விலை நிலவரம் என்ன? தொடர்ந்து தங்கம் விலை சரிய நேரிடுமா? முதலான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
தங்கம் விலை அண்மையில் இந்தியாவில் வரலாறு காணாத உச்சத்தினை எட்டியது. இதனால், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட, நகை வாங்குவோர் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருந்தனர். வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடுமோ என அச்சம் அனைவரது மனதிலும் நிலவியது.
இந்த நிலையில், தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்து இருக்கிறது. நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்து இருக்கிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5,540 ரூபாய் எனும் விலைக்கு விற்பனையாகிறது, அதோடு, சவரன் ஒன்றுக்கு ரூ.80 வரை குறைந்து ரூ.44,320 எனவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.8 குறைந்து 4,538 ரூபாய் எனும் விலையிலும், ஒரு சவரனுக்கு ரூ.64 வரை குறைந்து ரூ.36,304 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் எத்தகைய மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.00 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,000 எனவும் விற்பனையாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
NLCIL நிலங்களுக்கு அரசு குறைவான விலை கொடுக்கிறது-அன்புமணி ஆவேசம்!
MGNREGS வருகை பதிவேட்டில் சிக்கல்! தொழிலாளர்கள் வருத்தம்!