1. செய்திகள்

MGNREGS வருகை பதிவேட்டில் சிக்கல்! தொழிலாளர்கள் வருத்தம்!

Poonguzhali R
Poonguzhali R
Problem with MGNREGS Attendance Register! Workers upset!

வேலை நாட்களில் பதிவு செயல்முறை தாமதமாகும்பொழுது அல்லது நெட்வொர்க் பிழை ஏற்படும் போது, பெரும்பாலான தொழிலாளர்கள் வருகைப் பதிவேட்டில் இருந்து வெளியேறும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

திருச்சியில் உள்ள MGNREGS -இல் வேலைபுரியும் தொழிலாளர்கள் தற்பொழுது சிக்கலில் உள்ளனர். மொபைல் கண்காணிப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகள் மூலமாகத் தினசரி வருகைப் பதிவைத் தடுப்பதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தினசரி வருகைப் பதிவைத் தடுக்கும் அதன் மொபைல் கண்காணிப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகள் முதல் கட்டாய ஆதார் இணைப்பில் ஊதியம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் வரை எனப் பல்வேறு சிக்கல்கள் கண்காணிப்பில் இருப்பதாகத் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து அதிகரிகள் கூறுகையில், இதுபோன்ற சிக்கல்கள் அதிகமாக இருப்பதால், திட்டத்தைப் பெறுபவர்கள் இறுதியில் வேலையை முடித்துக்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மொபைல் கண்காணிப்பு அமைப்பு சென்ற ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழிலாளர்களுக்கு தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (NMMS) மூலம் கட்டாய வருகைக் குறிப்பை சுட்டிக்காட்டி, அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் (AIAWU) மாநிலப் பொருளாளர் பழனிசாமி கூறியிருக்கிறார். ஸ்மார்ட்போன் இல்லாததற்கு முதன்மையான தடையாக, ஆன்லைன் தளத்தில் ஏற்பட்ட கோளாறுகள், அவர்களில் பலர் தங்கள் தினசரி வருகையைப் பதிவு செய்வதைத் தடுக்கும் நிலையாக இருக்கிறது.

“மேலும், வயலில் உள்ள தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் தங்கள் வருகை குறிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை எனவும் கூறுகிறார். அவர்கள் தங்கள் கணக்கு மூலம் ஊதியத்தைப் பெறும்போதுதான் அவர்களுக்குத் தெரியும், என்று அவர் கூறியுள்ளார். மணச்சநல்லூர் தாலுகாவில் வருகைப் பதிவு செய்யும் பொறுப்பில் உள்ள மேற்பார்வையாளர் மற்றும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், "ஆய்க்குடி ஊராட்சியில் உள்ள மூன்று இடங்களில் பணிபுரியும் சுமார் 200 பேரிடம் காலை 9 மணிக்குள் ஆஜராக வேண்டும், ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டும். ”

கண்காணிப்பு தாமதாவதால் பதிவு செயல்முறை தாமதமாகும்போது அல்லது நெட்வொர்க் பிழை ஏற்படும் போது, பெரும்பாலான தொழிலாளர்கள் வருகைப் பதிவேட்டில் இருந்து வெளியேறிவிடுவார்கள், மேற்பார்வையாளர் வேறு வழியில்லை என்று கூறுகிறார். தொழிலாளர்கள் புகார் அளித்த மற்றொரு பிரச்சனையென்னவெனில், ஊதியம் பெறுவதற்கு தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது ஆகும். எங்களில் பலர் ஏற்கனவே எங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளோம்", ஆனால் கடந்த சில வாரங்களாக மத்திய அரசிடம் இருந்து ஊதியம் வழங்குவது குறித்து வங்கியில் கேட்டால், இணைக்கப்படாததால் பிரச்சனைகள் தொடர்வதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

MGNREGS பணிகளை மேற்பார்வையிடும் மூத்த மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, டிஜிட்டல் வருகைப்பதிவில் இதுபோன்ற பல சிக்கல்கள் காணப்படுவதாகவும், அவற்றைத் தீர்ப்பதில் இயலாமை இருப்பதாகவும் கூறியிருக்கிறார். "புதிய அமைப்பு மத்திய அரசால் திரும்பப் பெறப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்; இல்லையெனில் பிரச்சனைகள் திட்டத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைத்துவிடும்,” என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

பன்றிக்காய்ச்சல் அச்சம்! நாமக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்ட 20 பன்றிகள்!!

English Summary: Problem with MGNREGS Attendance Register! Workers upset! Published on: 26 March 2023, 04:49 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.